பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேட்டூர் 18032016

பெரியாரியல் விளக்க பொதுக்கூட்டம் – மேட்டூர் – 18.03.2016.

18-03-2016 வெள்ளிக்கிழமை மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சதுரங்காடி திடலில் ‘பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டம், கழகத் தோழர்களின் பறை இசையோடு துவங்கியது.

தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினர் (பாடகர்கள்; முத்துக்குமார், கோவிந்தராசு, அருள்மொழி. இசை; குமரப்பா, சீனி, காளியப்பன்) பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர்.

பொதுக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் செ.மார்ட்டின் தலைமை ஏற்க, நகர துணைச் செயலாளர் குமரப்பா வரவேற்பு உரை ஆற்றினார். கொளத்தூர் குமரேசன், மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் உரைகளுக்கு பின், புலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் உரையாற்றினார்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நகர பொருளாளர் கதிரேசன் நன்றி கூறினார்.

1015_1715440798739813_4686232373336822204_n 7674_1715441218739771_83298156694583874_n 944896_1715440922073134_7467357754025856886_n 995361_1715440265406533_5040236803761970491_n 1185242_1715440255406534_3909049500729129250_n 1374812_1715440895406470_6796457420446128598_n 1914869_1715440812073145_7934556052882405419_n 10334285_1715440925406467_509905759214562712_n 10343027_1715441235406436_2576390438473618785_n 10565230_1715441152073111_5563932367678654905_n 11895942_1715441185406441_7264870688335546448_n 12791012_1715440852073141_5529781551795669400_n

You may also like...