தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

அண்ணல் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணலின் சிலைக்கு தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மாலை அனிவித்தார். அதற்பிறகு தோழர்கள் சாதி ஒழிப்பு முழக்கங்களை விண்ணதிர முழங்கி அண்ணலுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட து.தலைவர் பால்ராசு, மாவட்ட து.செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன், தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

12991061_1730446443905915_66930492427381553_n 13010895_1730446487239244_6126345811677346048_n

You may also like...