மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. “மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...