11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்
ட பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார்.
ட புத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார்.
ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார்.
ட வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார்.
ட அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான்.
ட அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார்.
ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும் அய்ம்பத்தொன்பதாவது சட்டத் திருத்தம் நீக்கப்பட்டது. (இது இராஜீவ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மனித உரிமைப் பறிப்பு விதி)
ட 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த அனைத்து நிலச் சீர்திருத்தச் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டு இச் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாமல் தடுத்தார்.
ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசித் தேர்தல் சீர்திருத்த மசோதா கொண்டு வந்தார். பிறகு பிரதமராக வந்த சந்திரசேகர் அதைக் கூட்டுப் பொறுப்புக் குழுவுக்கு அனுப்பிக் கிடப்பில் போட்டார்.
ட பெண்களுக்கு 30 விழுக்காடு இடம் ஒதுக்கும் பஞ்சாயத்து ஆட்சி மசோதா கொண்டு வந்தார்.
ட நகராட்சிகள் நன்முறையில் வளர்ச்சியடையத் தனிச் சட்டம் கொண்டு வந்தார்.
ட வழக்கறிஞர்க்காகவும், ஏழையர்க்கும் பணமின்றி இலவச சட்ட உதவி பெற தனிச்சட்டம் கொண்டு வந்தார்.
ட தொழில் உறவுக் கொள்கையில், இதற்கு முந்தைய அரசு கடைப்பிடித்த வழி முறைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
ட காங்கிரசு ஆட்சி, தொழிலாளர்க்கு எதிராகக் கொண்டு வந்திருந்த தொழில் உறவுக் கொள்கைகளை நீக்க புதிய தொழிலுறவுச் சட்டம் கொண்டு வருவதற்காகத் தொழிற் சங்கங்கள், தொழில் முகவர்கள், அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்தார்.
ட நிர்வாகத்தில் தொழிலாளர்க்கு மிகுந்த பங்களிப்புக் கொடுக்க மசோதா கொண்டு வந்து முத்தரப்புக் குழு அமைத்தார். மே நாள் விடுமுறை அறிவித்தார்.
ட இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருந்தும், சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்படாமலிருந்த, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் அமைக்கப்பட்டது, அவரது ஆட்சியில்தான்.
ட புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டுப் பிறந்த நாளில், அவருக்குப் பாரத இரத்தினா பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில், அம்பேத்கர் படம் வைக்கப்பட்டது. அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடத்தத் தேசியக் குழு அமைக்கப்பட்டது.
ட பெண்கள் நலனுக்காக ஒரு தனி ஆணைக் குழுவினைச் சட்ட வடிவில் அமைத்து, குழு விற்கு முக்கிய அதிகார உரிமைகளை வழங்கினார்.
ட 1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில், கணவரை இழந்த சீக்கியப் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாத உதவித் தொகை, முந் நூற்றிலிருந்து, அய்ந்நூறாக உயர்த்தப்பட்டது.
குறிப்பு: (1984 இந்திராவைச் சுட்டுக் கொன்றதற்காகப் பழிவாங்கும் எண்ணத்தோடு, தில்லியிலும் மற்றும் சில பகுதிகளிலும் 6000 சீக்கியர்க்கு மேல் கொல்லப்பட்டனர்.
ட சிறுபான்மை மக்கள் நலனுக்காக 16 அம்ச கொள்கைத் திட்டம் வகுத்தார்.
ட முகமதுநபி பிறந்த நாளைத் தேசிய விடுமுறை நாளாக்கினார்.
ட மீனவரின் எந்திரப் படகுக்குக் குறைந்த விலையில் டீசல் உட்பட சலுகைகள் அளித்தார்.
ட தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் விலக்கப் பட்டது.
ட சிறு தொழில் மற்றும் கைவினைத் தொழிலுக்கான 680 திட்டங்களுக்குக் கடன் வழங்கப்பட்டது.
ட சிறு தொழில்களுக்கான முதலீடு ரூ.3 இலட்சத்தி லிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. நடுத்தரத் தொழில்களுக்கு இதனை ரூ.35 இலட்சத்திலிருந்து ரூ.75 இலட்சமாக்கினார்.
ட சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவே, ரூ.680 கோடியில் ஒரு தனி வங்கி அமைத்தார். உழவர், உழவுத் தொழிலாளர், கைவினைஞர்க்குக் கடன் ரூ.10 இலட்சத்தைத் தள்ளுபடி செய்தார்.
ட கோதுமை, நெல், கரும்பு, பருத்தி முதலியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தினார்.
ட வரவு செலவுத் திட்டத்தில் 49 விழுக்காட்டை விவசாயத்துக்கும், கிராமப்புறத்துக்கும் ஒதுக்கினார்.
ட நகர்ப்புறத் துப்புரவு, தூய்மைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கினார்.
ட வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்கும் தொகையில் சரி பாதி, கிராமப்புறங்களுக்கு ஒதுக்கினார்.
ட ஆண்டுக்கு 1.7 விழுக்காடு மட்டுமே உயர்ந்து வந்த வேலை வாய்ப்பை, 1990 முதல் ஆண்டுக்கு 3 விழுக்காடாக உயர்த்தினார்.
ட அனைவருக்கும் வேலை என்ற அடிப்படை யில் வேலை கோரும் உரிமையை அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக்கும் திட்டத்தைத் தேசிய வளர்ச்சி அமைப்புக்கு முன் வைத்தார். இதற்காக முதலமைச்சர் குழுவை அமைத்தார். இக்குழு அரசியல் சட்டத்திருத்த மசோதாவையும், வேலை உறுதிப்பாட்டு மசோதாவையும் தயாரித்தது.
ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மைய அரசிலும் மையப் பொதுப் படிப்பு நிலையங்களிலும்
27 விழுக்காடு வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தினார்.
ட கருநாடகத்தில் சொந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் தமிழகக் கோரிக்கையையேற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்தார்.
ட ஈழத்திலிருந்து இந்திய இராணுவத்தைத் திரும்பப் பெற உத்தரவிட்டார்.
ட ஈழத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி, விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர்கலைஞரை பேச்சு வார்த்தை நடத்தச் செய்தார்.
ட அரசு அலுவலகங்களில் தனது புகைப்படம் வேண்டாம் என்றவர். தனி விமானம் தவிர்த்து, பயணிகள் விமானத்திலேயே பயணித்தார்.
சென்னை கூட்டத்தில் தோழர்கள் பேசியதிலிருந்து
ஒரு தொகுப்பு
பெரியார் முழக்கம் 25072019 இதழ்