மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா
இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர். இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஓவியர் முகிலனுக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார்.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்