பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்
பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் 2018, டிசம்பர் 13ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடைபெற்றது. பா. ராஜன் தலைமை தாங்கினார்.
கோ. இளங்கோ (விடுதலை சிறுத்தைகள்), புவன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முனைவர் சுந்தரவள்ளி உரையாற்றினர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் சா. ராஜீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் சமர்கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழுவினருக்கு நூல்களை வழங்கி பாராட்டினார்.
பெரியார் முழக்கம் 20122018 இதழ்