இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

“ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ” சார்பாக 14.03.2019 வியாழன் காலை 10.30 மணியளவில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஐ.நா. வை ஏமாற்றி நீதியின் பிடியில் இருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கையே தமிழகத்தில் இருந்து வெளியேறு!
கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்தி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா!

என்கிற முழக்கங்களுடன் தி,வி,க,த.பெ.தி.க., விசிக,மநேமக,எஸ்.டி.பி.ஐ,இளந் தமிழகம், தவாக,த.தே.ம.மு.,த.தே.வி.இ.,த.வி.க.,மற்றும் பல்வேறு தோழமை அமைப்பினர் இம்முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தலைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன்,இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.கவின் தோழர் குமரன், த.தே.வி.இ. தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு மற்றும் பல்வேறு அமைப்பை சேர்நத தோழர்கள் கலந்து கொண்டனர்.

“அபிநந்தனுக்குக்கொரு நீதி?
பாலசந்திரனுக்கு ஒரு நீதியா?

“இந்திய அரசே!
இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே!
கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து!
தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்!”
“இனக் கொலை இலங்கையே, தமிழகத்திலிருந்து வெளியேறு” என முழக்கமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக போராட்டத்தில் மூன்று தீர்மானங்களை வலியுறுத்தினர். மேலும் இத்தீர்மானங்களை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை அமைப்பில் முன் மொழிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தீர்மானங்கள் :

1.சிறிலாங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட கூடாது. சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்குற்றப் புலன்விசாரணைக்கென்று சிறிலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்பு பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

2. போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொருமுறை பேரவைக்கு அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறிலங்காவுக்கான ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்ப்பட வேண்டும்.

3.இன அழிப்பு சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டு பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், புன்னகைப்பவர்கள், கூட்டம் மற்றும் வெளிப்புறம்

 

 

You may also like...