பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் படத்திறப்பு
பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் நினைவேந்தல் தலைமை கழக அலுவலகத்தில் 04.03.2020 அன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கியது. தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நிகழ்வு நடந்தது. வட சென்னை மாவட்டத் தலைவர் யேசுகுமார் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி படத்தைத் திறந்து வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வை தென் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார். சூலூரில் : 01.03.2020 அன்று சூலூர் அறிவியல் பூங்காவில் (எஸ். ஆர். எஸ்.மண்டபம்) ஆசிட் தியாகராசன் படத்திறப்பு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் ஆசிட் தியாகராசன் படத்தை திறந்து வைத்து அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்...
