‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 11ஆவது சந்திப்பு

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான நிமிர்வோம் 11ஆவது வாசகர் வட்ட சந்திப்பு, தலைமை அலுவலகத்தில் 03.11.2019 அன்று மாலை 5.30 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். தேன்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத்தின் நோக்கம் மற்றும் இனி வரும் காலங்களில் வாசகர் வட்ட சந்திப்புகள் குறித்து, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்கவுரை யாற்றினார். அதைத் தொடர்ந்து, வாசகர் வட்டத்தின் முதல் அமர்வில், ‘இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் விளைவித்த கலகம்’ என்ற தலைப்பில் அருண்குமார், ‘உயர்ஜாதி – ஏழை இடஒதுக்கீடு குறித்து’ தினேஷ்குமார், ‘சாதியக் கொடுமை யும் திராவிட இயக்கமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளரும் கழகத் தோழருமான பிரகாசும் உரையாற்றி னார்கள். இரண்டாம் அமர்வில், சட்ட எரிப்பு போராட்டத்தின் பெருமை மிகு வரலாறு குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சீனி விடுதலை யரசு சிறப்புரையாற்றினார். இறுதியாக ப.அருண்குமார் நன்றி கூறினார்.

நிகழ்வை நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 07112019 இதழ்

You may also like...