நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டத்தை விளக்கி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் செப். 30 அன்று காலை முதல் இரவு வரை சென்னையில் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. ஓட்டேரி, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டங்களுக்கு முறையே தட்சிணாமூர்த்தி, சங்கிதா, இராஜி, ப. அருள், மனோகர், கரு. அண்ணாமலை தலைமை தாங்கினர். இரா. உமாபதி, அய்யனார், சுகுமார் கூட்டங்களில் உரையாற்றினர். நாத்திகன் பாடல்களைப் பாடினார். 22 தோழர்கள் பயணக் குழுவில் இடம் பெற்றனர். துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன.

பெரியார் முழக்கம் 03102019 இதழ்

You may also like...