திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 16.10.2019 அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் ஓ.டி முருகன் கோவில் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா –  திருக்குறள் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு ,  தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர், சௌ.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இல.குமார் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அ.சி.சின்னப்பத் தமிழர் (தமிழ்வழிக் கல்வி இயக்கம்), ஆவடி நாகராசன் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சிவ செந்தமிழ்வாணன் (தமிழ் தேசக் குடியரசு இயக்கம்), க.சூரியா (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), என்.கே.மூர்த்தி (டாக்டர் கலைஞர் பத்திரிக்கையாளர் சங்கம்), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக பூ.இராமலிங்கம், (திராவிடர் கழகம்)  நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 31102019 இதழ்

You may also like...