வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

இந்த காலத்தில லெ bசைவா-ன்றது எதையுமே சொல்லக் கூடாது மனுசன்ல எல்லாருமே சமம்னு ஒரு வார்த்த  சொல் லிட்டு போயிட்ரா. உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு கெடையாது. அப்டின்னு சொன்னா அதை ஒப்புக் கொள்ள முடியாது. சாஸ்திரம் அதை அங்கீகரிக்கவில்லை. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு

உhயசயஉவநசளைவiஉள உண்டு. அப்டின்ரதை சாஸ்திரம், வேதம் சொல்லுகிறது. இதை நான் வெளிப்படையா சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டின்ரா! நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கோ, எனக்கு தெரியாது இது நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்த வெச்சிண்டு  ஒரு விசயத்த சொல்றேன்! நாம் உபயோகப்படுத்துகிற எல்லா பொருட்களிலும் பிறப்பு குணாதிசயத்தை (bசைவா உhயசயஉவநசளைவiஉள) நாம எதிர்பாக்ரோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், நம்முடைய மனிதனில் மட்டும் தான் எல்லாரும் சமம்னு வெளிய வாயால சொல்லிட்டு போயிட்ரோம். இப்ப நான் கேட்கிறேன்? எல்லாரும் சமம், ஒருவனுக்கு பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினாலே எல்லாரும் சமம்னு சொல்பவர்களிடம் நான் கேட்கும் கேள்வி என்ன வென்றால்? இப்போ வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. வளர்ப்பு நாய் வளர்க் கிறோம்ல, அது என்ன குணாதிசயங் களில் இருக்குனும்னா! எங்க வீட்ல வளர்ப்பதில்லை இருந்தாலும் சொல்ரேன். ஒரு பொமரேனியன் வளர்கிறான்னு வெச்சுக்கோங்க, இந்த நாயை மட்டும் ஏன் வளர்க்க வேண்டும்? இது தான் வளர்ப்பு நாயாய் இருக்க முடியும். ஏன் நாயிலேயே இன்னொரு ஜாதி இருக்கு. அல்சேசன்னு ஒரு ஜாதி இருக்கு. அதை ஏன் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று கேட்டால் அது வளர்ப்பு நாய் இல்லையென்று சொல்கிறார்கள். ளுடி றiவாin வாந உhயசயஉவநசளைவiஉள டிக னடிபள, உநசவயin னடிபள யசந உயடடநன யீநவ யniஅயடள, உநசவயin னடிபள உயடடநன யள றடைன யniஅயடள. றுiவாin வாந உhயசயஉவநசளைவiஉள நாய்களுக்குள்ளே இருக்குன்னு சொன்னா!  மனிதர்களுக் குள்ளேயும் அந்த வித்தியாசம் இல்லைன்னு நாம் ஏன் சொல்லனும்னு கேட்கிறேன் நான்? மனிதர்களிலும்கூட எவன் உயர்ந்தவன், எவன் தாழ்ந்தவன் என்பதிலும் கூட குணாதிசயங்கள் பிறப்பிலேயே உருவாகிவிடுகிறது. அதை நாம் மறுக்க முடியாது.

அதிலேயும் இன்னொன்றை கேள்விப்பட்டேன். உண்டா என்பதை நீங்கள் தான் சொல்லனும். ‘திரிப்பூர சொத்த சுத்தி’ ன்னு வெச்சுருக்கா, பிராமணனா இருந்தா எப்டின்னா? மூன்று பரம்பரையாவது பிராமின் என்பது முக்கியமாக அவனுடைய அப்பா  அம்மா வழியாக வந்துருக்கனும். அதாவது எப்படி என்றால், அப்பா அம்மா, அப்பா அம்மா, அப்பா அம்மா என்று மூன்று தலைமுறையாவது வந்துருக்கனும். அப்போது தான் அவனுக்கு “பிராமண”னுக்கான குணாதிசயங்கள் வந்திருக்குமென்று சாஸ்திரத்தில் சொல்லிருக்கு! இது ஆச்சரியமில்லை நான் கேள்விப்பட்டது, இந்த நாய்களை வாங்குபவர்கள்லாம், அந்த நாய்க்கு பெடிகிரி என்று வாங்குகிறார்கள். பெடிகிரின்னா (நாய்க்கான உணவு) என்ன? சொல்லுங்கள்? அது என்னாது கலப்பில்லாம ஒரிஜினலா இருக்கிறது தான் பெடிகிரி. அத தான் “பிராமிண”னுக்கும் இருக்கனும்னு நாங்க சொல்றோம். தப்பு என்ன அதில்? ஒன்றுமில்லை. குதிரைகள் அதாவது குதிரை பந்தயம் நடத்துகிறார்களே அதில், ஒருவர் சொன்னார், இந்த குதிரைப் பந்தயத்தில் ஒருத்தன் பணம் கட்டுகிறான். பணம் கட்டுறவன் என்ன பன்றான்னா? அந்த குதிரையின் செநநன என்னான்னு சோதனை பன்றான். அந்த செநநன எங்கிருந்து வந்ததுன்னு பாத்து அதுக்கு திரிப்பூர சொத்த சுத்தி பாக்றான். திரிப்பூர சொந்த சுத்தினா என்ன அர்த்தம்?  அதுமூன்று தலைமுறையாக ஒரே இனத்தில் பிறந்த குதிரையா (றுநயவாநச வை ளை டிசபைiயேட hடிசளந யசந வாசநந பநநேசயவiடிளே கசடிஅ வாந ளயஅந செநநன)  அப்டியான்னு பாக்றா! அப்போது in யடட டிவாநச வாiபேள ளை ய உடிளேனைநச யள செநநன ளை எநசல எநசல iஅயீடிசவயவே.  எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாட்டுல அரிசி தான் முக்கியமானதுனா, அந்த அரிசிக்கு குறிப்பிட்ட  அது நெல்லூர் அரிசியா? சம்பாவா? என்னான்னு அதோட செநநன முக்கியமாக பார்க்கிறோம். பழம் வாங்குவதாக இருந்தால்கூட கலப்பினம் இலலாததது தானான்னு முக்கியமா பார்க்குறோம். முக்கியமாக இன்னொன்று சொல்கிறேன் . யாரும் தப்பா நெனச்சுக்கக்கூடாது. இந்த காலத்துல, தமிழ்நாட்டில மத்த இடங்களில்லாம் கூட போராட்டங்கள் நடக்குது. என்ன போராட்டம்னா? மரபணு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடாது, அதை கொண்டு வந்தால் நம்ம ஊரு விவசாயமே அழிந்து போய்விடும் என்று கூறி, மரபணு மாற்றப்பட்ட விதைகள் எதையுமே உபயோகப்படுத்தக்கூடாதென்று கூறுகிறார்கள். நான் அதையே தான் மனிதர்களுக்கும் சொல்றேன். நீங்க உபயோகப்படுத்துகிற பழம்,விதை, தானியங்களில் கலப்பு இருக்கக் கூடாது, அரிசியில் இருக்கக் கூடாது, மிருகங்களில் இருக்கக் கூடாது ஆனா உங்கள்ல (மனிதர்களில்) மட்டும் கலப்பு இருக்கலாம்னு நீங்க எப்படி எதிர்பார்க்கிறீங்க? அது தப்பு இல்லையா?

– தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் வெங்கடகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், புரோகிதர் கோலத்துடன கேரள மாநிலம் கொச்சியில் நடந்த உலகத் தமிழ் பிராணர் மாநாட்டில் பேசியது

குறிப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மேற்குறிப்பிட்ட இனவெறிப் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. கழக சார்பில் இரா. உமாபதி, பிரவின் குமார் (மே 17), நாகை திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி), மணிகண்டன் (த.வி.க.), ச. குமரன் (த.பெ.தி.க.) ஆகியோர் மனுவை அளித்தனர்.

பெரியார் முழக்கம் 08082019 இதழ்

You may also like...