‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

நிமிர்வோம் 13 ஆவது வாசகர் வட்ட நிகழ்வு. பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா நினைவு தின சிறப்பு வாசகர் வட்டமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் 16.02.2020 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகவியிலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாஷ்  தலைமை வகித்தார்.  அண்ணாவின் இரங்கலுக்காக கலைஞர் எழுதிய கவிதையின் சிறு பகுதியை, ‘இதயத்தை தந்திடண்ணா’ என்ற தலைப்பில் யாழினி வாசித்தார்.

நிகழ்வில் 30.12.2019 அன்று வேலூர் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆற்றிய உரை, ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  வெளியிட, பேராசிரியர் மு.நாகநாதன்  பெற்றுக் கொண்டார்.

கடந்த வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை, ‘குடியுரிமை சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்’ என்கிற தலைப்பில் வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலை பெரியார் யுவராஜ்  வெளியிட பேராசிரியர் மு.நாகநாதன்  பெற்றுக்கொண்டார். இவ்விரு நூலையும் கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சி எடுத்து வெளியிட்டுள்ளார்.

‘அண்ணாவின் முற்போக்கு அரசியல்’ என்ற தலைப்பில் ஜெயபிரகாஷ்  உரையாற்றினார். நிறைவாக அண்ணாவின் படத்தை திறந்து வைத்து அண்ணாவின் மாநில சுயாட்சி பற்றி பேசிய பேராசிரியர் மு. நாகநாதன்  (மாநில முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர்), அண்ணா-பெரியார் என்ற இரு தலைவர்களுக் கிடையிலான அழுத்தமான கொள்கைப் பிணைப்பு – உறவுகளை விரிவாக பகிர்ந்து கொண்டார். இந்தியா என்ற துணைக்கண்டம் கூட்டாட்சி தத்துவத்துடன் செயல்பட வேண்டும் என்று தனது உரையை முடித்தார். இறுதியாக மயிலாப்பூர் ஜா.உமாபதி  நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 20022020 இதழ்

You may also like...