‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பாக 02.02.2020 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவும், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கற்க கல்வி அறக்கட்டளை செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினருமான

கரு அண்ணாமலை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ப.அமர்நாத் வரவேற்புரை யாற்றினார்.

‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினர், ‘ஹசவiஉடந 21’ அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற தலைப்பில், தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் வகையில் வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, மருத்துவர் எழிலன், மா.சுப்பிரமணி (தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்), வழக்கறிஞர் எஸ். துரைசாமி (துணைத் தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கொளத்தூர் மணி (தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்), நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மாணவர்களுக்கான கல்வி உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

பெரியார் முழக்கம் 06022020 இதழ்

You may also like...