கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்
திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவல கத்தில் 22.02.2020 அன்று மாலை 5:30 மணியளவில் ‘மாதவி’ குறும்படம் திரையிடப்பட்டது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி வர வேற்புரை யாற்றி னார். தொடர்ந்து படக் குழுவினர் அறிமுகம் நடைபெற்றது. அதன்பின் கலந்துரையாடல் தொடங்கியது.
குறும்படத்தைப் பற்றி ஆழமான விவாதங்களை ஒவ்வொருவரின் பார்வை யிலும் கலந்து கொண்ட தோழர்கள் கேள்விகள் எழுப்பியும், பாராட்டுக்களைத் தெரிவித்தும் குறும்படத்தைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினர்.
சிறப்பு விருந்தினர்களான, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், மனித உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன், நக்கீரன் வலைதளப் பொறுப்பாளர் பிலிப்ஸ், மனிதி செல்வி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, பேராசிரியர் சரசுவதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தோழர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு இடையில் சிறப்புரையாற்றினர்.
விரட்டு கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். குறும்படம் திரையிடல், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் விரட்டு கலை பண்பாட்டு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.
படத்துக்கான உரையாடலை எழுதியவர் வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் ராஜீ, இயக்கியவர் – அவரது வாழ்க்கை இணையரும் இயக்குனருமான சாரதி. படக்குழுவினரை இயக்குனர் சாரதி அறிமுகப்படுத்தினார். தி.வி.க. விரட்டு கலை பண்பாட்டு மய்யத்தின் சார்பில் படத் தொகுப்பு – தியாகு; ஒளிப்பதிவாளர் – சுரேஸ் குமார்; இசை – டி.எம். உதயகுமார்; வடிவமைப்பாளர் – அருண்குமார்; இயக்கம் – சாரதி; எழுத்து – ராஜீ ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் விழாவிற்கு வந்திருந்ததோடு விவாதங்களிலும் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 27022020 இதழ்