ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 22.01.2020 அன்று காலை 11 மணியளவில் ரஜினிகாந்த் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ரஜினிகாந்தின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது உமாபதி, ‘இனியும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கா விட்டால் தொடர்ந்து ரஜினிகாந்த் படங்கள் திரையிடப்படும் திரையரங்கங்கள் முற்றுகையிடப்படும்’ என  தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் பின் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை

6 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், புதுச்சேரி மற்றும் சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 30012020 இதழ்

You may also like...