சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு, தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே என்கிற பரப்புரைப் பயணத்திற்கான சென்னை மாவட்ட குழுவின் துவக்க விழா நிகழ்வு 25.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று இலாயிட்ஸ் சாலை பெரியார் சிலை அருகில் காலை 9 மணிக்கு துவங்கியது.
தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் பயணத்தை துவக்கி வைத்தார். பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.
மே 17 இயக்கத்தினர் பறையிசையோடு துவங்கிய சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் பரப்புரை பயணம் துவங்கியது.
முதல் நாளின் இரண்டாம் இடமான பல்லாவரத்தில் தற்போது பரப்புரைப் பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழகத் தோழர் பெரியார் யுவராஜ் பயணத்தின் நோக்கத்தினை குறித்து உரையாற்றினார். தோழர் நாத்திகன் பாடல் மூலம் பிரச்சாரம் செய்தார்.
முதல் நாளின் மூன்றாவது இடமான அனகாப்புத்தூரில் பரப்புரை பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழக தோழர் எட்வின்_பிரபாகரன்அவர்கள் பிரச்சாரத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். அந்த பகுதியில் இருந்த சிறுவர், சிறுமியர்கள் ஆர்வமாக துண்டறிக்கையை படித்து கேள்வி எழுப்பியது கூடுதல் சிறப்பாக இருந்தது.
பரப்புரைப் பயணத்தின் முதல்நாளின் நிறைவுப்பிரச்சாரம் தாம்பரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை விளக்கி தோழர்.துரை அருண் அவர்கள் உரையாற்றினார். நிறைவாக இன்று முழுவதும் பறை இசைத்து பிரச்சாரத்திற்கு பேருதவி புரிந்த மே17 இயக்க தோழர்களுக்கும் பாடல்கள் மூலம் பிரச்சாரம் புரிந்த தோழர் நாத்திகன் அவர்களுக்கும் புத்தகங்கள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டன.
தமிழர் களம் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள திவிக தோழர்களை நேற்று இரவு தங்கள் அலுவலகத்தில் தங்க இடமளித்து இன்று காலை உணவையும் வழங்கி தோழர்களை இரண்டாம் நாள் பிரச்சாரத்திற்கு வழியனுப்பிவைத்தார்.
பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் நாளின் முதல் இடமாக முடிச்சூர் பகுதியில் விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் பாடல்களோடு எழுச்சிகரமாக இன்று காலை துவங்கியது. தோழர் எட்வின் பிரபாகரன் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.
பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் நாளின் இரண்டாம் இடமாக படப்பை பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார்.
பரப்புரைப் பயணத்தின் இரண்டாம் நாளின் மூன்றாவது இடமாக வாலாஜாபாத் பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது தோழர் ரவிபாரதி அவர்கள் பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி சிறப்பாக உரையாற்றினார். ஏராளமான பள்ளி மாணவிகள் தாங்களாகவே வந்து துண்டறிக்கைகளை வாங்கி சென்றனர்.
இரண்டாம் நாளின் நிறைவுப் பிரச்சாரத்தை பொதுக்கூட்டமாக காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலை கழக தோழர்கள் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகே ஏற்பாடு செய்திருந்தனர்.
வரவேற்புரை: தோழர். தினேஷ்
மாவட்ட செயலாளர் (திவிக)
பரப்புரை பயண நோக்கத்தை விளக்கி :
தோழர்.இரா.உமாபதி (திவிக)
தோழர்.பாசறை அ.செல்வராஜ் (விசிக)
தோழர். காஞ்சி அமுதன்
பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்
தோழர்.தஞ்சை தமிழன்
(காஞ்சி மக்கள் மன்றம்)
தோழர்.தாண்டவமுர்த்தி
(தன்னாட்சி தமிழகம்)
தோழர்.சீதாவரம் அ.மோகன்
(தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம்)
தோழர். ராமஜெயம் (திவிக)
ஆகிய தோழர்கள் உரையாற்றினார்கள்.
நன்றியுரையை: தோழர்.ஏழுமலை கூறினார்.
முன்னதாக விரட்டு கலைகுழுவினர்
வீதி நாடகம் நடத்தினர்.
ஏராளமான பொதுமக்கள் நமது கருத்துகளை கேட்டு பயணம் வெற்றியடைய வாழ்த்திவிட்டு சென்றனர்.