அக்கம்-பக்கம் பாவம், காமராசர்
அடேங்கப்பா! இது உண்மை தானா? என்று மூக்கில் மீது விரலை வைக்க வேண்டியிருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சென்னை நகரில் திரும்புமிடமெல் லாம் இந்த ஆண்டு காமராசர் பிறந்த நாள் விழா சுவரொட்டிகள்; வண்ணப் பதாகைகள்! அத்தனையும் ஒட்டியது காங்கிரசுக்காரர்கள்தான்! காமராசர் பெயர் படங்களோடு ஒட்டிய பிரமுகர் களின் பெயர்கள்! ‘உயிரே’ என்கிறார் ஒருவர்; தலைவரே என்கிறார் மற்றொருவர்! ‘தெய்வமே’ என்கிறார், இன்னொருவர்! ‘சபதமேற்கிறோம்’ என்கிறார், இன்னொரு தலைவர்! காமராசர் நூற்றாண்டு சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக ஒரு விழாக்கூட இவர்கள் நடத்த முன்வரவில்லையே என்று நாம் கேட்க வரவில்லை. கேட்டால் ‘போடா தேசத் துரோகி’ என்று தூற்றுவார்கள்! (அப்போது நமது இயக்கம் தான் பல ஊர்களில் காமராசர் விழாக்களை நடத்தியது) இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு சுவரொட்டிகள் வருவதற்கு என்ன காரணம்? எல்லாம் வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தல்தான்!...
