உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

ஆதாரங்களுடன் அறிவியல் கூறும் ஆராய்ச்சி முடிவுகளின்படி பிக்பேங்க் என்ற பெரிய வெடிச் சிதறல் காரணமாக இந்த ‘அண்டம்’ என்னும் பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. அதன் தொடர்ச்சியாக விண்மீன் (நட்சத்திர) மண்டலங்களும் (கேலக்ஸி), அவற்றின் விண்மீன்களும் தோன்றின. இந்த அண்டத்தில் கோடானுகோடி விண்மீன்களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான விண்மீன் மண்டலங்களில் ஒன்றுதான் நமது கதிரவ விண்மீனை (சூரிய நட்சத்திரத்தை) உள்ளடக்கிய பால்வெளி விண்மீன் மண்டலம் (மில்கி வே கேலக்ஸி) ஆகும். நமது இந்தப் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் மட்டும் நம் கதிரவனைப் போன்ற 20000 கோடி விண்மீன்கள் உள்ளன. பால்வெளி விண்மீன் மண்டலத்திலுள்ள நம் கதிரவ விண்மீன் தோன்றி இன்றைக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒளி தந்து நம் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இந்தக் கதிரவன் மூலப் பொருள்களின்றி அழிந்து போகும் என்பது அறிவியல் உண்மை! கதிரவத் துகள்களிலிருந்து உருவான நம் உலகம் தோன்றி ஏறக்குறைய 475 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இதுதான் உலகம் தோன்றிய வரலாறு.

உயிர் தோன்றி மனிதன் உருவான வரலாறு

475 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நம் உலகில் முதல் 150 கோடி ஆண்டுகளுக்கு எந்த உயிரினமும் உண்டாகவில்லை. பின் முதன்முதலாக பல கோடி ஆண்டு வேதியியல் மாற்றங்களின் காரணமாக கடலுக்கடியில் ஒரு செல் உயிரினம் உண்டானது. அந்த முதல் உயிரினம் ஏதோ ஒரே நாளில் இயற்கைக்குப் புறம்பான தெய்வீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்று யாராவது கருதுவீர்களானால் அவர்கள் மீது நாம் அனுதாபப்பட முடியுமேயல்லாது வேறொன்றும் செய்ய இயலாது. 150 கோடி ஆண்டு வேதியல் மாற்றங்களின் (டீசபயniஉ நுஎடிடரவiடிn) விளை பொருள்தான் அந்த முதல் உயிரினம். இப்படியாகக் கடலில் உருவான ஒரு செல் உயிரினம் கோடிக்கணக்கான ஆண்டு படிநிலை வளர்ச்சியின் காரணமாகப் பலசெல் உயிரினமாகி பின் நீரில் மட்டும் வாழக்கூடிய மீனினமாகி (குiளாநள) அதன் பிறகு இன்னும் கோடிக்கணக்கான ஆண்டு படிநிலை மாற்றத்தின் விளைவாக நீரிலும் நிலத்திலும் வாழ வல்லமையுள்ள தவளையினம் உருவாயிற்று. தவளையினத்திலிருந்து பாம்பு பல்லி போன்ற ஊர்வன இனம் (சுநயீவடைநள) தோன்றிற்று. கோடிக்கணக்கான ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த டைனோசார் விலங்குகள் இந்த ஊர்வன வகையைச் சேர்ந்தவையே! இன்னும் கோடி கோடி ஆண்டுகள் உயிர் வேதியியல் படிநிலை மாற்றங்களின் காரணமாகப் பாலூட்டி இனமும் பறவையினமும் ஊர்வன இனத்திலிருந்து உருவானது. பாலூட்டிகளின் படிநிலை மாற்றத்தின் ஒரு நிலையில் குரங்கு இனம் உண்டானது. அந்தக் குரங்கு இனத்திலிருந்து படிநில மாற்றம் அடைந்து இன்றைக்குச் சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக மனித இனம் உண்டானது. இவையெல்லாம் ஊடகமான செய்திகள் அல்ல. உடற்கூறியல், உடலியக்கவியல், உயிர்வேதியியல், இரத்த வகை ஒற்றுமை, மரபணுவியல், தடவியல் மற்றும் புதை பொருள் ஆராய்ச்சி, கதிரியக்கவியல் போன்ற பல்வேறு அறிவியல்கள் வழி கண்டறிந்த உண்மைகள்.

போலியான மதம் தோன்றிய வரலாறு

ஆக 475 கோடி ஆண்டு வரலாற்றுக்குச் சொந்தமான உலகில் மனிதனின் வரலாறு வெறும் 20 இலட்சம் ஆண்டுகளே! இந்த 20 இலட்ச மனித வரலாற்றில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனித இனத்துக்கு மதம் கிடையாது! இன்றைக்கு மனித இனத்தை மத அடிப்பையில் பிளவுபடுத்தி உலக அமைதியைக் கெடுத்து உலக அழிவுக்குக் காரணமாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற அனைத்து மதங்களும் 4500 ஆண்டுகளுக்குள் சில தன்னலக் கும்பல்களால் மக்களின் அச்சம் அறியாமை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையே! இடி, மின்னல், நிலச்சரிவு, வெள்ளம், எரிமலை, நிலஅதிர்வு, காட்டுத் தீ, ஆழிப் பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கான அறிவியல் உண்மைகளை அறிந்திராது அச்சத்தால் நடுங்கியிருந்த மனித குலத்தை உண்மைகளுக்குப் புறம்பான காரணங்களை அவைகளுக்குக் கற்பித்து பொய்யான மதங்களை உருவாக்கி அடிமைப்படுத்தியது அந்தத் தன்னலக் கூட்டம். அறிவோடு எதிர்த்துப் பேசிய பகுத்தறிவுவாதிகள் அழிக்கப்பட்டனர்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...