புழல் சிறைக் கைதியின் கடிதம்

கடந்த சில மாதங்களாக சிறையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டைப் படித்து வருகிறோம். வெளியில் நடக்கும் செய்திகளை அறிந்து மிகவும் உற்சாகம் பெற்று வருகிறோம். 19.1.2012 இதழில் வெளிவந்த ‘25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்’ என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உண்மைகளை விளக்கியது. கூடங்குளம் எதிர்ப்பு திடீரென்று தோன்றியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தரகு முதலாளிகளுக்கு சேவகம் செய்து வரும் ஏடுகளுக்கு இந்தக் கட்டுரை சரியான பதிலாக இருந்தது.

– வே. சுந்தரமூர்த்தி, புழல் மத்திய சிறை

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...