புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்கள் சேர்க்கும் பணியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். 500 சந்தாக்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக பிப்.23 அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 100 சந்தாதாரர்களுக்கான தொகை, முகவரிப் பட்டியலை தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, கழகத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் இயக்க நூற்றாண்டு  கருத்தரங்குகளை மாநாடுபோல் நடத்துவது என்றும், புரட்சிக் கவிஞர் விழாவை பகுத்தறிவு தமிழ் உணர்வாளர்களை அழைத்து, அறிவியல் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் புரட்சிப் பண்பாட்டு விழாக்களாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், வழக்கறிஞர் குமாரதேவன், தென்சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தபசி குமரன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கருத்தினைக் கூறினர்.

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...