Category: பெரியார் முழக்கம்

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம் 0

ஜாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம்

23.8.2015 அன்று மாலை சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ‘சமகால வாழ்வியலும் ஜாதிய வன்கொடுமை களும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தென்சென்னை திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செல்வேந்திரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் இளையராஜா, தமிழ் இளைஞா மாணவர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.கே. பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் நடுவம் தலைவர் ஜோ. பிரிட்டோ, மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத் தலைவர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக கருத்துரை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே. மதிமாறன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சி மாலை 5.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிதம்பரம் மதன்குமார் வரவேற்புரை வழங்கினார். செயப்பிரகாசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும், சிறப்பாக...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து விடுவிக்க மரணதண்டனையை எதிர்த்து, தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்ட ‘தழல் ஈகி’ செங்கொடியின் நினைவு நாள் செப். 28. செங்கொடியின் பொது வாழ்வகமாகிய காஞ்சி மக்கள் மன்றம், அன்று செங்கொடியின் நினைவுநாளை செங்கொடியின் இலட்சியத் திருநாளாக பின்பற்றியது. வெகு மக்களும் இயக்கங்களும் சாரை சாரையாக அணி வகுத்து, செங்கொடி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஈழத் தமிழர் விடுதலைக்கும், மரணதண்டனை ஒழிப்புக்கும் சூளுரைத்தனர். பிற்பகல் 4 மணியிலிருந்து மக்கள் மன்றத்தின் கலைக் குழுவினர், ஜாதி, மத எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆதரவு ஈழப் போராளிகளின் வீரங்களைப் பறை சாற்றும் எழுச்சி இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ‘ஜாதி-பெண்ணடிமை’ ஒழித்த சமத்துவபுரியாக விளங்கும் காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அன்பைப் பரிமாறினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் அடுத்த இளைய தலைமுறை பறைகளை கையில் எடுத்தது; குழுக்களாக நடனமாடியது; பாடியது. மக்கள் தொண்டினை வாழ்க்கையாக்கிக் கொண்ட மன்றத்தின் செங்கொடி...

மதிப்பு என்பது.. 0

மதிப்பு என்பது..

ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதனாவானா? தாசி காதலியாவாளா? என்பதுபோலதான் தன் தன் நலனுக்கு, தன் தன் பொறுப்புக்கு ஆக காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்ட தாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக் கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதக மடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம். அது, பொதுவாக மதிக்காததாகாது. பெரியார், ‘விடுதலை’ – 08.04.1950 பெரியார் முழக்கம் 10092015 இதழ்

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது 0

பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு ஆதரவாக பல்கலை முற்றுகை: கழக மாணவர்கள் கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் அமைப்பாளர் பாரி. சிவா தலைமையில் 4.9.2015 அன்று மாலை 3.30 மணிக்கு பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை மீண்டும் துறைத் தலைவர் பணியில் அமர்த்தவும், இடை நீக்கம் செய்யப்பட்ட 10 மாணவர்களை உடனடியாக பல்கலையில் அனுமதிக்கவும வலியுறுத்தி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி நேப்பியர் பாலத்திலிருந்து முற்றுகையிட சென்றபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 30 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு மாணவர் கழகம் பிரகாசு, விஜயகுமார், செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர் திருநாவுக்கரசு, பிரதிப், அருண், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாரிமுத்து, பிரகாசு, விழுப்புரம் அய்யனார், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி உள்ளிட்ட தோழர்கள் கைதானார்கள். பெரியார் முழக்கம் 10092015 இதழ்

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்! 0

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பினார்!

பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் படைப்பாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தான் பெற்ற அகாடமி விருதை மீண்டும் அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான இவர், தன்னுடைய முடிவை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் தனக்கு அளிக்கப்பட்ட விருதுடன், ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசையும் திருப்பி அளிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, “இந்த முடிவு பற்றி வேறு எந்த எழுத்தாளர்களுடனும் நான் விவாதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க நானே எடுத்த முடிவு. கல்புர்கியின் கொலைக்கு இந்துத்துவ சக்திகளே காரணம். இந்தச் சம்பவம் என்னை உலுக்கியிருக்கிறது. இப்போது நான் மவுனித்திருக்கக் கூடிய நேரம் கிடையாது. மவுனம் இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார். 2010-2011ஆம் ஆண்டு...

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!  இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!” 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!”

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? இதோ நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன், முப்பாட்டன் காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்? பார்ப்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உழைப்பு, அடிமை வேலை, குலத்தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமுதாயம் விதித்த கறாரானக் கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படித் தகர்த்தோம்? ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளைப் பெற்றதால் தகர்த்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமுல்படுத்துவதில் – காமராசர் ஆட்சியில் தொடங்கி, தமிழகத்தில் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின; அடைக்கப்பட்ட கல்விக் கதவுகள் திறந்தன; படித்தோம்; சுயமரியாதைப் பெற்றோம். ‘ஜாதி’யைக் காட்டி, ‘...

கோழைகளின் மிரட்டலுக்கு  அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி 0

கோழைகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி

“எங்கள் உயிரைப் பறித்தாலும், பகுத்தறிவு கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று பகுத்தறிவாளர்கள் உறுதியுடன் பதிலடி தந்தள்ளனர். கருநாடக மாநிலத்தின் தலைசிறந்த சிந்தனை யாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், முன்னாள் துணைவேந்தர் எம்.எம். கல்புர்கி, தார்வாரில் அவரது இல்லத்தில் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப் பட்டவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே புவித் ஷெட்டி என்ற பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஒரு மதவெறியன், “இந்து மதத்தை எதிர்த்தால் அதற்கு இதுதான் தண்டனை. இனி அடுத்த இலக்கு – மைசூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கே.எஸ்.பகவான்” என்று ‘டிவிட்டர்’ தளத்தில் பதிவேற்றினான். அந்த ஆசாமியை கைது செய்து, கருநாடக சிறையில் அடைத்த அதே நாளில், நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது. இந்த மிரட்டலுக்கு கே.எஸ். பகவான் அளித்த பேட்டி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுகளில் வெளி வந்திருக்கிறது. “அந்த இளைஞர் தவறாக வழி நடத்தப்படுகிறார். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அவரை சரியாக வழி நடத்தவில்லை....

அறிவியல் போர்வையில் புதிய மோசடி 0

அறிவியல் போர்வையில் புதிய மோசடி

நவீன மூடநம்பிக்கைகள் இப்போது அறிவியல் பெயரில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, ‘நடு மூளை செயலாக்கம்’  (மிட் பிரைன் ஆக்டிவேஷன்) என்ற பெயரில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி, பம்பாய் நகரங்களைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும் இது பரவி வருகிறது. மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டுக்கும் இடையில் உள்ள நடுமூளைப் பகுதியைத் தீவிரமாக இயக்கினால், அது செயல்படும்போது கண்களை மூடிக்கொண்டு கூட படிக்கலாம்; படித்தவை நன்றாக பதியும். தேர்வுகளில், போட்டிகளில் குழந்தைகள் சாதனை படைப்பாளர்கள் என்ற ஒரு நம்பிக்கை பரப்பப்பட்டு, இதற்காக 10 நாள் பயிற்சி, 15 நாள் பயிற்சி என்ற மய்யங்கள் உருவாகி வருகின்றன. குழந்தைகளின் படிப்புக்காக எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் ரூ.25000 வரை கட்டணம் செலுத்தி இந்த மய்யங்களில் சேர்க்கிறார்கள். சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் பேசிய பகுத்தறிவாளர் பேராசிரியர் நரேந்திர நாயக், ‘இந்த மய்யங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு...

0

எனக்கு ‘வீர சொர்க்கத்தில்’ நம்பிக்கையில்லை – பெரியார்

பெரியார் சமதர்மக் கொள்கைகளை கைவிட்டார் என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்த பொது வுடைமையாளர்கள், ஜீவா என்றழைக்கப்பட்ட ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோர் பெரியார் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட 5ஆவது சுயமரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாநாட்டில் ஜீவா, பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு பெரியாரை விமர்சித்ததற்கு பதிலளித்து பெரியார் நிகழ்த்திய உரை இது. தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடி யில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு, நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு, சௌகரியமில்லாது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு....

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே 0

பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே

நிலவுடைமைக்கு எதிரான போராட்டத்தின் வழியாகவே ஜாதியமைப்பை தகர்க்க முடியும் என்று மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நில உரிமையை ஜாதியமைப்பே கட்டமைத்திருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலை பொருளியல் பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் கூறினார். தமிழகத்தில் ஜாதிக்கும் நிலவுரிமைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியவர் ஜெரோம். சென்னை திருவான்மியூரில் பனுவல் நூலக அரங்கில் ‘புதிய தமிழ் ஆய்வுகள்’ என்ற அமைப்பின் நிகழ்வில் ஆக°டு 21ஆம் தேதி மாலை அவர் இது குறித்து விரிவான ஆய்வுரையை முன் வைத்தார். ஒருவரிடம் நிலம் இல்லை என்பதற்கான காரணமாக அவரது வறுமை சொல்லப்படுகிறது. அது உண்மையானால், பார்ப்பனர், வேளாளர் ஜாதி சமூகம் மட்டுமே நிலவுடைமை யாளர்களாக எப்படி மாற முடிந்தது? உண்மையில் வறுமை காரணமாக நில உரிமை கிடைக்காமல் போக வில்லை. நிலஉரிமை மறுக்கப்பட்டதால்தான் பார்ப்பன-வெள்ளாளர் அல்லாத மக்கள் குறிப்பாக...

மாவட்டப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங் களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் கழகப் பொறுப்பாளர்கள். தருமபுரி மாவட்டம் தலைவர் – வெ. வேணு கோபால்; செயலாளர் – ம. பரம சிவம்; அமைப்பாளர் – அ. சந்தோஷ் குமார். தருமபுரி நகரம் : தலைவர் – கு. நாகராஜ்; செயலாளர் – அ. சுதந்திர குமார். அமைப்பாளர் : பெண்ணாகரம் ஒன்றியம் – எம்.பலராமன்; காரிமங்கலம் ஒன்றியம் – கோ. செந்தில்குமார்; நல்லம் பள்ளி ஒன்றியம் – எம். இராமதாசு. அறிவியல் மன்றம் : எஸ். வையாபுரி, சி. பிரியா. கிருட்டிணகிரி மாவட்டம் தலைவர் – தி. குமார், காவேரிப்பட்டினம்; செயலாளர்-கா. குமார், அலேசீபம்; அமைப்பாளர்-சிவ. மனோகரன்-காவேரிப் பட்டினம்; இராஜேஷ் – கிருட்டிணகிரி. மாவட்ட துணைத் தலைவர் : கிருஷ்ணன், நீலகிரி.  மாவட்ட துணைச் செயலாளர் : ப. வாஞ்சி நாதன். தமிழ்நாடு அறிவியல் மன்றம் : மூங்கப்பட்டி ஆசிரியர் சக்திவேல். காவேரிப்பட்டினம் ஒன்றியம்...

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம் 0

தலையங்கம் ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் துரோகம்

சிறீலங்காவில் இரண்டு பெரும் சிங்களர்களின் கட்சிகளான அய்க்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு என்ற பெயரில் சிங்களப் பேரினவாத ஆட்சியை அமைத்து விட்டன. தமிழர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதேசத்தில் 16 இடங்களில் தேர்வு பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் தமிழரின் முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு விட்டது. சிங்கள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ‘போர்க் குற்றங்கள்’ தொடர்பாக இலங்கைக்கு எதிரான தனது நிலைப் பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டு விட்டது. இலங்கை அரசின் ‘ஒப்புதல் கலந்தாலோசனை’யுடன் இலங்கை அரசே நடத்தும் உள் நாட்டு விசாரணையை மட்டுமே அய்.நா.வில் தீர்மானமாகக் கொண்டு வரப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி நிஷா பி°வால் கூறியிருக்கிறார். (இவர் பிறப்பால் குஜராத்தி பனியா – அமெரிக்காவில் குடியேறியவர்) நடந்து முடிந்த இலங்கை தேர்தலில் எதிரும் புதிருமான சிங்களர் கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பையும் இணைத்துப்...

0

பட்டேல்கள் நடத்தும் கலவரம்:  இடஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி!

தற்போது முன்னேறிய வகுப்பில் உள்ள பட்டேல் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 22 வயது இளைஞரான ஹார்த்திக் பட்டேல் தலைமையில் பல இலட்சக்கணக்கான பட்டேல் இன மக்கள் திரண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையே பாதிக்கும் வகையில் தீவிரமான  போராட்டத்தை நடத்தி வருவது குறித்து ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இந்த போராட்டம் குறித்த பல்வேறுவிதமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தை, அதன் போக்கை அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவரின் கருத்துக்களை கூர்ந்து நோக்குகையில் இந்த பட்டேல் இன மக்களின் போராட்டத்தின் நோக்கம் என்பது, இட ஒதுக்கீட்டு உரிமையை பெறுவதை விட இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக இரத்து செய்ய வைப்பதுதான் முதன்மையானதாக தெரிகிறது. போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் ஹார்த்திக் பட்டேல் தன்னுடைய பேட்டிகளில், “இட ஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும்,...

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

0

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...

0

கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர்  சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம் அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க! காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க! கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து....

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி 0

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி

அயோத்தியில் ‘ராமன்’ கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பன சக்திகளும், சங்பரிவாரங்களும் பா.ஜ.க. ஆட்சியும், ஏன் துடிக்கின்றன? ‘ராமன்’ மநுதர்மப்படி ஆட்சி நடத்தியதுதான் இதற்குக் காரணம். இதை இறந்துபோன காஞ்சி மூத்த பார்ப்பன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே கூறியுள்ளதை ‘தமிழ் இந்து’ நாளேடு அதன் ஆன்மிகப் பகுதியில் ஜூன் 26, 2014இல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பகுதி இதோ: “ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்யபாரம் நடத்தவில்லை. தன் அபிப்பிராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்வீகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவா ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசா°த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்” – என்கிறார்,...

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி 0

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர்...

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்? 0

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமம் எனப்படும் ளுவயகக ளுநடநஉவiடிn ஊடிஅஅளைளiடிn மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும். இக்குழுமம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்துகிறது. 2006 வரை மண்டல அளவிலேயே இப் பணியமர்த்தும் நடவடிக்கைகளை இக் குழுமம் மேற்கொண்டு வந்தது. (இந்திய அளவில் 7 மண்டலங்களாக இக்குழுமம் செயல்பட்டு வருகிறது ). இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளில் கிடைத்து வந்தது. 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் அகில இந்திய அளவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என கூறியிருந்தாலும்கூட 50 சதவீதப் பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய...

இதுதான் கெயில் நிறுவனம்! 0

இதுதான் கெயில் நிறுவனம்!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத் துக்குக் குழாய் வழியாக கொண்டு சென்ற எரிவாயு வெடித்து, 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதில் மிகுந்த கவனமும் பராமரிப்பும் தேவை. ஆனால், வழமையான அதிகாரிகள் அலட்சியம்தான் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்த்துப் போராடினால் வளர்ச்சியை விரும்பாதவர்கள், வெளிநாட்டுப் பணம் பெறும் தொண்டு நிறுவனங்களால் தூண்டி விடப்படுகிறவர்கள் என்று குற்றம் சாட்டும் ஆட்சிகள், இந்த சாவுக்கு என்ன பதிலை கூறப் போகின்றன? தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பால் இந்த ஆபத்தான திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவு என்பதை இந்த விபத்து உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘கூடங்குளம்’ திட்டத்தை நியாயப்படுத்தும் ஆட்சியும், அதிகார வர்க்கமும் இந்த ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? மவுலிவாக்கம் அவலம்! சென்னை மவுலிவாக்கத்தில் ஏரிக்கரை மீது எழுப்பப்பட்ட 11 அடுக்கு மாடிக்...

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு 0

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு

இராஜபக்சே, கொழும்பில் முன்னின்று நடத்திய நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று நாடு முழுதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. அப்போது சென்னை மயிலாப்பூர், மந்தை வெளியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சலகம் மீது வெடி பொருள் வீசியதாக கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், தமிழக அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஏவியது. 2013, அக்டோபர் 29 ஆம் தேதி கைது செய்யப் பட்ட தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை.அருண் ஆகியோர் வழக்கிற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக 2014, ஜூன் 24 ஆம் தேதி நீதிபதி வி.தனபாலன், எம்.சொக்க லிங்கம் முன்...

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது 0

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது

கழகத்தின் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் மற்றொரு ஊர்தியை வழங்கியுள்ளது. இது கழகத்துக்கான இரண்டாவது ஊர்தி, புதிய ஊர்தியாகும். இது குறித்து ஈரோடு மண்டல செயலாளர் இரா. இளங்கோவன் தந்துள்ள செய்தி: “நமது பிரச்சார உத்திகளை இன்றைய காலத்திற்குகேற்ப மாற்றி அமைத்திட வேண்டிய அவசியமான சூழலில் உள்ளோம். ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமானால் குறைந்தது ரூ..20,000/- வரை தற்போது செலவா கின்றது. நமது தோழர்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினால் மீண்டும் அடுத்தக் கூட்டம் நடத்துவதற்கு 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகின்றது. தோழர்களும் பொருளாதாரப் பற்றாக்குறையால் சோர்ந்து போகின்றனர். வெறுமனே பொதுக் கூட்டம் போட்டு ஒலி பெருக்கி மூலம் மணிக்கணக்கில் பேசினாலும் பொது மக்கள் விரும்பி அக் கூட்டத்தை முழுமையாகக் கேட்பதில்லை. ஆகவே, நமது பிரச்சாரங்களை வீடியோவாக, படங்கள் மூலமாக, சாதி ஒழிப்பு, உலகம் தோன்றிய வரலாறு, உயிர்கள் உருவான வரலாறு, மூடநம்பிக்கை ஒழிப்புப்...

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை 0

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை

தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா-இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது. கோவையைச் சார்ந்த ஒருவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திட மிருந்து பெற்ற பதிலில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளுக் கிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ நாடாளுமன்ற அனு மதியோ அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே வெறும் வெற்றுத் தாளைக் காட்டி ஒப்பந்தம் என்று மத்திய வெளி யுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் ஏமாற்றி வருகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று காங்கிர° ஆட்சி, நீதிமன்றத்தில் கூறியது. இப்போது பா.ஜ.க. ஆட்சியும் இதே கருத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உறுதிப்படுத்தியுள்ளது....

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அரசு ஊழியர்கள் மீது கடந்தகால குற்றங்களுக்காக நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு இதேபோல் பதவியை இழந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பு கூறி விட்டால், இந்தியாவில் அரசியல் சண்டைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்! அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களான ‘வி.அய்.பி.’களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும். – உள்துறை அமைச்சகம். அவர்கள் ‘வி.அய்.பி.’க்கள்தான் என்பதற்கு இருந்த ஒரே அடையாளத்தையும் இப்படிப் பறித்தால் எப்படி? சீன எல்லைப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டம். – ‘தினமலர்’ செய்தி அதேபோல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எல்லைப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவது பற்றியும் பரிசிலிப்பது நல்லது! பேய், பில்லி, சூன்யம் விரட்டுவதாகக் கூறி திருநெல்வேலி யில் ஒரு முதியவரின் தலையில் 3 அங்குல...

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்! 0

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்!

மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்தி மொழித் திணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் இந்திமொழியை மட்டுமே தனது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவார் என்று முதல் அறிவிப்பு வந்தது. அது அவரது உரிமை. ஆனாலும்கூட குஜராத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், இந்தியை ஏன் பேச்சு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடும்போது, இந்தி மொழிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று மோடி ஆட்சி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தபோது இந்தி பேசும் மாநிலங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்று சமாதானம் கூறினார்கள். ஆங்கிலத்தின் இணைப்பு மொழிக்கான பயன்பாட்டை, படிப்படியாக அகற்றிட வேண்டும் என்பதே இதற்கான உள்நோக்கம் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதே யாகும். இப்போது தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ நாளேட்டில் (8.7.2014) மத்திய இரயில்வே துறை, இந்தி மொழியில் மட்டுமே ஒரு விளம்பரத்தைச் செய்துள்ளது. அந்த விளம்பரம் இரயில்வே...

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்! 0

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்!

துவாரகா பீட பார்ப்பன சங்கராச்சாரி-சுவருப்பானந்தா சரசுவதி, சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வழிபடக் கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், சாய்பாபா பக்தர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். சீரடி சாய்பாபாவை ‘இந்துக்கள்’ தங்கள் கடவுளாக நாடு முழுதும் கோயில் கட்டி வழிபடுவதோடு ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற சேவை களையும் செய்து வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீரடி சாய்பாபா – பிறப்பால் ஒரு முஸ்லீம். ஆனாலும் முஸ்லீம் மதத்தைவிட்டு விலகியவர்; சீரடி சாய்பாபா ஒரு கடவுள் இல்லை என்றும், இந்து கோயில்களில் அவர் படங்களை அகற்ற வேண்டும் என்றும் வாரணாசியில் இந்த சங்கராச்சாரி கூறியவுடன், சங்கராச்சாரி சீடர்கள் வாரணாசி தெருவில் இறங்கி, சாய்பாபாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக சாய்பாபாவை வழிபடும் இந்துக்கள், துவாரகா பீட சங்கராச்சாரி உருவ பொம்மைகளை எரித்தனர். சாய் பாபா பக்தர்கள், சங்கராச்சாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதைக் கண்டித்து பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘சாதுக்கள்’...

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் 0

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக 2014 மே மாதம் 15.5.2014 முதல் 19.5.2014 முடிய 5 நாள்கள் கொடைக் கானலில் 8 முதல் 18 வயது குழந்தைகளுக்கான பழகு மகிழ்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 68 குழந்தைகள் கலந்து கொண்டனர். பதினைந் திற்கும் மேற்பட்ட அறிவியல் மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டு நெறிப்படுத்தினர். 15.5.2014 : தொடக்க நாள் நிகழ்வாக முற்பகல் அறிமுக வகுப்பு நடந்தது. குழந்தைகள் தங்களின் சுய விவரங்களையும், திறமைகள், பலம், பலவீனம் ஆகியன குறித்தும் சுவையாக பகிர்ந்து கொண்டனர். இவ்வகுப்பினை நீலாவதி நெறிப்படுத்தினார். பிற்பகல் படைப் பாற்றல் வகுப்பு நடந்தது. பல்வேறு தலைப்பு களில் கதை, கவிதை, நாடகம், பேச்சு, பாடல், ஓவியம், தனி நபர் நடிப்பு ஆகிய திறமைகளை குழந்தைகள் வெளிப்படுத்தினர். வகுப்பறை வன்முறைகள் குறித்தும், எப்படிப்பட்ட வகுப்பறை, எப்படிப்பட்ட ஆசிரியர், தங்களுக்கு வேண்டும் என்பதும் குழந்தை களால் நடித்துக்...

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள் 0

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள்

விழா மேடையில் அய்யா வைத்தி லிங்கம் ஏற்புரையாற்றும்போது, தான் வாழ்ந்துவரும் அழகியநாயகிபுரத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்ததைப் பற்றிக் கூறினார். கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் ஊரான நாட்டுச்சாலை தான் இவரது சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கணபதியும் இவரும் மிக நெருங்கிய நண்பர் களாக இருந்துள்ளனர். அவரது வழிகாட் டலில்தான் இவர் சிங்கப்பூர் சென்றிருக் கிறார். அப்போது கடவுச் சீட்டு எடுக்கும் போது அதிக நாள் பணியாற்றலாம் என்று கூறி, நான்காண்டுகள் வயதைக் குறைத்துக் காட்ட 11-4-1918 என்று தனது பிறந்த நாளை மாற்றிப் பதிந்த கதையையும் இவர் நகைச் சுவை பொங்கக் கூறுவதுண்டு. நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த நிலையில் அவரை பலர் கேலி பேசியதையும், அவமானப்படுத்தியதையும் எடுத்துரைத்தார். ஒரு திருமண வீட்டில் அவரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மொய் எழுதத் தொடங்கியபோது குழந்தைப் பேறு இல்லாதவன் திருமண மொய் எழுதக்கூடாது என்று மொய்...

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை! 0

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை!

உலகின் பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரியது இந்திய தொடர்வண்டித் துறை. ஒவ்வொரு நாளும் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் பயணிக்கும் இந்தத் துறையின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களுக்கான சேவை என்பதுதான். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே மாற்றி வசதிப் படைத்த பணக்காரர்களுக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்குமான துறையாக (ஞசடி சுவைஉh-ஞசடி ழiனேi) மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு மோடி ஆட்சியின் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தில் 6.5 சதவீதமும் உயர்த்திவிட்டார்கள். இப்போது பயணிகள் கட்டணத்தை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் எரிபொருள் விலையோடு இணைத்து விட்டார்கள். இனி, எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பயணிகள் கட்டணங்களும் உயரும். “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது” என்ற ‘வேத’ சுலோகத்தைப்போல் “கட்டண உயர்வு,...

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும்  பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை 0

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும் பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய அமைப்பின் தலைவர் அழகியநாயகபுரம் ப.அ. வைத்தியலிங்கம், அவர் நூறு வயதை நிறைவு செய்துள்ளார். அய்யா வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: நூற்றாண்டு நிறைவு விழா காணும் விழா நாயகர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் அய்யா அழகிய நாயகிபுரம் ப.அ.வைத்திய லிங்கம் அவர்களே! அவரது வாழ்விணையர் காசியம்மாள் அவர்களே! பூரிப்போடும் பெருமிதத்தோடும் இவர் களுடைய நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் அன்பிற்குரிய அம்மா மேகலை அவர்களே! இளையரசி அவர்களே! கோமதிஅவர்களே! அவரது அன்பு மகன் கலைநேசன்அவர்களே! அவர்கள் குடும்பத்தார்களே! இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிற உறவினர்களே! நண்பர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் பெருமிதத்தோடு கலந்து கொண்டிருப் பதற்கான காரணத்தை பலரும் பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். குறிப்பாக, பெரியார்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

நாட்டில் நிதிநிலை மோசமாகி விட்டது; வரி விதிப்பின் மூலம் தான் ஓரளவு சரி செய்ய முடியும். – நிதியமைச்சர் அருண் ஜெட்லி வணிகவரி, வருமான வரி அலு வலகங்களைப்போல் “மோச மான நிதிநிலையை சரிப்படுத் தும் வரி” அலுவலகங்களையும் நிரந்தரமாக தொடங்கிடுங்க…! குற்ற வழக்குகளில் ஆளுநர் களை விசாரிக்கும் உரிமை நீதி மன்றங்களுக்குக் கிடையாது. – ஆளுநர் ஷீலா தீட்சத் ஏன், சுற்றி வளைச்சுப் பேசுறீங்க மேடம்… செய்த ஊழல்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம்தான் கவர்னர் பதவின்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே? நாடாளுமன்றத்தில் விலை வாசி உயர்வு பற்றி நடந்த விவாதத் தின்போது ராகுல் காந்தி தூங்கியதாக பா.ஜ.க. புகார். – செய்தி கூச்சல், குழப்பம் இல்லாம அமைதியாக தூங்குவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் ‘ஜன நாயகத்துக்கு’ நேரம் கிடைக் குதே; அதுக்காக பெருமைப் படுங்க… ட போலி என் கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு பா.ஜ.க. தலைவர் பதவி. -செய்தி அதுக்காக...

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல் 0

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல்

பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரி ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ என்ற பெயரில் செயல்படும் பா.ம.க. ஆதரவு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் பாலு, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதே போல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்பு களும் வராகி என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரிக் கிறது. ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ சார்பில் வழக்கறிஞர் விஜயன் வாதாடுகிறார். பெரியார் முழக்கம் 24072014 இதழ்

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்! 0

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்!

‘சமஸ்கிருத வாரம்’ கடைபிடிக்க வேண்டும் என்று மோடி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருப்பது, சி.பி.எஸ்.ஈ. போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும்தான். பல்வேறு அரசியல் கட்சிகள் இதை எதிர்த்திருப்பதோடு, தமிழக முதல்வரும் எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றைத் தவிர, அநேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்தத் திணிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்! சமஸ்கிருதம்  – ஒரு மொழி மட்டுமல்ல; அது, பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடும் ஆகும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி, பார்ப்பனப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்ற கொள்கைப் பார்வையோடு இந்த முயற்சிகளில் இறங்கி யிருப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே ‘சமஸ்கிருதத்தை’ பேசுவதாக 2001 மக்கள் தொகை அறிக்கையில் பதிவு செய்திருப்போர் 14,135 பேர் மட்டுமே. இதுவும்கூட 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 49,736 ஆக இருந்து...

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது 0

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது

தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளான வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உ.பி., பீகார் போன்ற வடமாநிலத்தவர் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழ்நாடு உள்பட தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைகள் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அகில இந்தியத் தேர்வுகளாக மாற்றப்பட்டதுதான் காரணம். இந்தத் தீர்ப்பில்கூட 50 சதவீத இடங்களை மண்டல அளவில் தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தும், நடுவண் ஆட்சி அதை ஏற்காமல், அகில இந்திய அளவிலேயே நடத்தியது. அகில இந்திய தேர்வு முறை காரணமாக – லக்னோ, பாட்னாவிலுள்ள தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளைச் செய்து கையூட்டாக பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பள்ளிகளில் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாட வலியுறுத்தும் மோடி ஆட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு. – செய்தி அதேபோல், கல்யாணம், கரு மாதி, அர்ச்சனை என்று 365 நாள்களும் சமஸ்கிருத நாளா கவே, காதைத் துளைக்கிறதே, அதையும் சேர்த்து இந்த கட்சிகள் எதிர்க்கக் கூடாதா? திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடம்பில் சட்டை இல்லாமல் பூணூலுடன் சாமி தரிசனம் செய்தார். – செய்தி இது ‘ஆன்மிகக் கிளப்’புகளுக் கான ‘டாப்லெஸ்’ (மேலாடை யில்லாத) கலாச்சாரம்; இதில் தலையிடும் அதிகாரம் உச்சநீதி மன்றத் துக்கே கிடையாது. மூச்… ‘மங்கள்யான்’ செயற்கைக் கோள் – திட்டமிட்டப்படி செப் டம்பர் 24இல் செவ்வாய் கிரகத்தை அடையும். – விஞ்ஞானி மயில்சாமி அச்சச்சோ… மங்கள்யானுக்கு செவ்வாய் தோஷம் புடுச்சிடுமே! உடனே பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தாகணும், ஓய்! 298 பேருடன் பறந்த மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? மர்மம் நீடிக்கிறது....

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்? 0

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட் டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்று உண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சில நாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளி யிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்து செய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றை ஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே.கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார். ‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக் கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. கடந்த 08.07.2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி.கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலய பிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட் டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்...

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன் 0

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன்

இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ.நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார் சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர். ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும் வைதீக தர்மமும் படிப்படியாகத் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் வர்ணாசிரம தர்மம் மிக இறுக்கமாகப் பேணப்பட்டது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான கற் கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றின் வெளிப்பா டுகளாக அரசர்களாலும் அவர்களின் குடும்பத்தின ராலும் அரசு அதிகாரிகளாலும் பார்ப்பனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. வடநாட்டிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு சதுர்வேதி மங்கலங்களில் குடிவைக்கப்பட்டனர். அவர்களுக்குக்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும். – ஞான தேசிகன் அப்படியானால் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் அணிகளுடன்கூட கூட்டணி கிடையாதா? தமிழ்நாட்டில் ‘தீண்டாமை’ என்பது எல்லாம் அறவே கிடை யாது. – தந்தி டி.வி.யில் மருத்துவர் இராமதாசு ஓ, அதுக்காகத்தான் ‘திராவிட கட்சிகள்’ தமிழகத்தை நாச மாக்கிவிட்டன என்கிறீர் களா? புரியுது! புரியுது! இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை நடத்த – அய்.நா. நியமித்த குழு இந்தியா வருவதற்கு மோடி ஆட்சி ‘விசா’ மறுப்பு. – செய்தி ஸ்ரீராமபிரான் நடத்திய யுத்தத்துக்குப் பிறகு, இலங்கை யில் எந்தப் போரும் நடந்தது இல்லை. இதுவே எங்க வெளிநாட்டு ‘இந்துத்துவா’ கொள்கை! புரிஞ்சுக்குங்க. ஜாதியமைப்பு மிகச் சிறப்பானது; அதற்கு எதிராக எந்த புகாரும் பழங்காலங் களில் வந்ததே இல்லை. – வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் சுதர்சன் ராவ் மோடிஜி, இப்படி ஒரு ஆசாமியை எந்தக் காட்டி லிருந்து பிடிச்சுட்டு...

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள் 0

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள்

தமிழின உரிமை மீட்பு தொடர் கூட்டங்கள்; அகமணமுறை எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கிராமம்தோறும் வாகனப் பரப்புரைப் பயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் என்று ஒரே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு பகுதிகளில் பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. 50க்கும் மேற்பட்ட கழகச் செயல் வீரர்கள் இந்தத் தொடர் பரப்புரை இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்று களப்பணியாற்றி வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை செயலவைத் தீர்மானங்களை விளக்கும் பரப்புரைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஜூலை 15 – பழனி, ஜூலை 16 – காரைக் குடி, ஜூலை 18 – நெல்லை மாவட்டம், பாவூர் சத்திரத்திலும் நடந்தது. இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் ஜூலை 23 ஆம் தேதி மன்னார்குடியிலும், ஜூலை 24 – மயிலாடுதுறை யிலும், ஜூலை 26 -சின்ன சேலத்திலும் நடந்தது. மூன்றாம் கட்டப் பயணம் 30 ஆம் தேதி...

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்! 0

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் போட்டுத் தந்த துரோகப் பாதையில் வீரியத்துடன் நடைபோடுகிறது, பா.ஜ.க. ஆட்சி. அய்.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்சி மனு போடுகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட மனித உரிமையாளர்கள் குழு இந்தியாவுக்கு வருவதற்கு ‘விசா’ வழங்க மறுத்து விட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவுடன் இணைந்து வெளிப்படையாக செயல்படும் சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வின் ‘செயல் உத்திக் குழு’ தலைவர் பதவிக்கு முடிசூட்டப்பட்டுள்ளார். பதவி கிடைத்தவுடன் இலங்கைக்குப் போய் இராஜபக்சேயையும் அவரது தம்பி, கோத்தபய இராஜபக்சேயையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக வேகம் வேகமாக காய்களை நகர்த்தக் தொடங்கிவிட்டார்....

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த  இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு –  தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி 0

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு – தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் – கோவை செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கிடும் பொதுக் கூட்டங்கள், தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் : ஜூலை 30 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டக் கழக சார்பில் கூடுவாஞ்சேரி அரசு பயணியர் மாளிகையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 4 மணியளவில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக தோழர்களுடன் கலந்து ஆலோசித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட தோழர்களை அறிவித்தார். மாவட்டத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட அமைப்பாளர் தெள் அமிழ்து, துணைத் தலைவர் ராஜ் குமார், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன் வெல்த் போட்டிக்குச் சென்ற இந்திய அதிகாரி ‘செக்ஸ்’ புகாரில் கைது. – செய்தி ‘காமன் வெல்த்’ நாடுகளுக்கான போட்டியை ‘காமன்’ போட்டி யாக நினைத்து விட்டார்போல. சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஊராட்சி களில் இந்து மத வழிபாடுகளைத் தவிர, வேறு மத வழிபாடுகள் நடத்த அரசு தடை. – செய்தி அப்ப…! ‘இந்து ராஜ்யம்’ அமைந்து விட்ட இந்த 60 ஊராட்சிகளிலும் இனி வறுமை இல்லை. வளம் கொழிக்கும் ‘தர்மம்’ செழிக்கும்னு சொல்லுங்க. வகுப்புக் கலவரங்களை ஒடுக்க, 2002இல் குஜராத்தில் மோடி பின்பற்றிய நடைமுறைகளையே நாடு முழுதும் விரிவாக்க வேண்டும். – பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஜி. ரவி இஸ்லாமியர் இனப் படுகொலைக்கு ‘குஜராத் நடைமுறை’ன்னு பெயர் மாற்றம் செஞ்சுட்டீங்களா? திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1800 கிலோ தங்கம் ‘ஸ்டேட் பாங்ங் ஆப் இந்தியா’ வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது. – செய்தி...

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள் 0

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் கோவை செயலவையில் நிறைவேற்றிய தமிழர் உரிமை பறிப்புகள் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கி நாடு முழுதும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பரப்புரைச் செயலாளர், செயலவைத் தலைவர், மாணவரணி பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். முதல்கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி பழனி யிலும், 16 ஆம் தேதி காரைக்குடியிலும், ஜூலை 18 ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத் திலும் நடைபெற்றது. இரண்டாம் சுற்றுப்பயணம் ஜூலை 23இல் மன்னார்குடியிலும், 24 ஆம் தேதி மயிலாடு துறையிலும், ஜூலை 26 ஆம் தேதி சின்ன சேலத்தி லும் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கட்டமாக ஜூலை 30 ஆம் தேதி காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும், ஜூலை 31 ஆம் தேதி சென்னை ஓட்டேரியிலும், ஆக°டு முதல் தேதி வேலூரிலும், ஆக°டு 2 ஆம் தேதி...

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது! 0

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது!

மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன் 6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு...

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம் 0

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்

1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் சமஸ்கிருதம் பேசியோர் 356. அதில் 315 பேர் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது உதாரணம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்  பேசத்  தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை. இது பெரியார் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர்கூட இல்லை. 1981இல் 6106 நபர்களாக இருந்தவர்கள், 1991இல் 49,376 நபர்களாக அதிகரித்து, 2001இல் 14,135 நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, அவ்வப் போது தங்கள் ‘மொழி அடையாளத்தை’ மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது,...