கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக 2014 மே மாதம் 15.5.2014 முதல் 19.5.2014 முடிய 5 நாள்கள் கொடைக் கானலில் 8 முதல் 18 வயது குழந்தைகளுக்கான பழகு மகிழ்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 68 குழந்தைகள் கலந்து கொண்டனர். பதினைந் திற்கும் மேற்பட்ட அறிவியல் மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டு நெறிப்படுத்தினர்.
15.5.2014 : தொடக்க நாள் நிகழ்வாக முற்பகல் அறிமுக வகுப்பு நடந்தது. குழந்தைகள் தங்களின் சுய விவரங்களையும், திறமைகள், பலம், பலவீனம் ஆகியன குறித்தும் சுவையாக பகிர்ந்து கொண்டனர். இவ்வகுப்பினை நீலாவதி நெறிப்படுத்தினார். பிற்பகல் படைப் பாற்றல் வகுப்பு நடந்தது. பல்வேறு தலைப்பு களில் கதை, கவிதை, நாடகம், பேச்சு, பாடல், ஓவியம், தனி நபர் நடிப்பு ஆகிய திறமைகளை குழந்தைகள் வெளிப்படுத்தினர். வகுப்பறை வன்முறைகள் குறித்தும், எப்படிப்பட்ட வகுப்பறை, எப்படிப்பட்ட ஆசிரியர், தங்களுக்கு வேண்டும் என்பதும் குழந்தை களால் நடித்துக் காட்டப்பட்டது. மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் பெரியவர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் குழந்தைகளின் வெளிப்பாடு நிகழ்ந்தது. இவ்வகுப்பினை ரஞ்சிதா, சிவகாமி வழி நடத்தினர்.
16.5.2014 : இரண்டாம் நாள் குழந்தைகள் 8 முதல்
13 வயது ஒரு பிரிவினராகவும் 14 முதல் 18 வயது முடிய ஒரு பிரிவினராகவும் பிரிக்கப் பட்டு உலகம் தோன்றிய வரலாறு, உயிரினம் தோன்றிய வரலாறு ஆகிய வகுப்புகள் நடந்தன.
சிவகாமி, ஜாக்குலின், ஜ°டின் ராஜ், சுப்பிரமணி ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். விளக்கப் படங்கள், விவாதங்கள் என வகுப்பு பயனுள்ளதாக அமைந்தது.
பிற்பகல் நகுலன், பிரசாத் ஆகியோரால் “மூடநம்பிக்கைகளில் பில்லி சூனியம்” என்ற தலைப்பில் செய்முறை விளக்கம் நடந்தது. பில்லி சூனியம் எவ்வாறு எடுக்கப்படுகிறது. ஓமகுண்டத்தில் தானாகத் தீ பிடிப்பது எப்படி, செய்வினை வைத்தல் போன்றவற்றை நேரடியாகச் செய்து காட்டினர்.
சுடுகாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்டை யோட்டினை குழந்தைகள் பயமின்றி கைகளில் எடுத்துப் பார்த்தனர். செய்வினை பற்றிய பயம், பேய், பிசாசு குறித்த பயம் ஆகியவற்றைப் போக்கி அறிவியல் தெளிவை ஏற்படுத்தும் வகுப்பாக இது அமைந்தது.
மாலை வகுப்பு பாலியல் கல்வி குறித்து நீலாவதியும், மனித உரிமைகள் குறித்து பேராசிரியர் சரசுவதியும் நடத்தினர். அடிப்படை உரிமைகள், கல்வி உரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய அடிப் படையான செய்திகளைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகுப்பாக இது இருந்தது. பின்னர் து.சோ.பிரபாகரின் ‘அச்சம் தவிர்’ குறும் படமும், பூங்குழலியின் ‘தீ வரைவு’ ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
17.05.2014 : பாலின சமத்துவம் குறித்து பூங்குழலி, ஜ°டின்ராஜ் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். ஆண்களும் பெண்களும் சமூகத்தில் வேறுவேறான நிலைமைகளில் வைக்கப்பட்டிருப்பதையும், சமத்துவ சமூகம் படைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றிய விவாதமாக இவ்வகுப்புகள் நடந்தன. 8 முதல் 13 வயது குழந்தைகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, செய்தித் தாள்களில் உருவங்கள் செய்து தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி முடிய கலிலியோ அறிவியல் மையத்தைச் சார்ந்த சத்யமாணிக்கம், தேவி ஆகியோர் கோளரங்கம் அமைத்து நிகழ்ச்சி நடத்தினர். இதில் கோளரங்கம் அமைக்கப்பட்டு, ‘நட்சத்திரப் பயணம்’ என்ற தலைப்பில் உலகம் உருவான விதம் பற்றிய காட்சிகள் காட்டப் பட்டன. குட்டி ராக்கெட் மாதிரி வடிவம் குழந்தைகளால் தயாரிக்கப்பட்டது. கோளரங்கத்தை நேரில் சென்று பார்க்க முடியாத மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
மாலை வகுப்பில் பாலியல் கல்வி வகுப்பில் மறுத்தல் திறன், உடலமைப்பு முதலியன குறித்த விளக்கங்கள் ஜவகர், நீலாவதி, பூங்குழலி ஆகியோரால் விளக்கப்பட்டது.
7 மணி முதல் 8 மணி முடிய மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பில் சிவகுமார், வீரன் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர். குழந்தைகளைக் குழுக் களாகப் பிரித்து மூடநம்பிக்கைகளைப் பட்டியலிடச் செய்து அவற்றைப் பற்றிய விவாதம் நடந்தது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இவ் வகுப்பு அமைந்தது. 14 முதல் 18 வயதிலானவர் களுக்கு இரவு உணவிற்குப் பின்னரும் இவ்வகுப்பு சுவையான விவாதங்களுடன் வீரனால் நடத்தப் பட்டது.
18.5.2014 : நான்காம் நாள் சுற்றுச் சூழல் வகுப்பு நடந்தது. வகுப்பறையில் உட்கார்ந்து சுற்றுச் சூழலைக் கற்காமல் நேரடியாகப் பார்த்து கற்கும் பொருட்டு குழந்தைகள் பேரீஜ்ஜம் ஏரிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுச் சூழலைப் பற்றிய வகுப்பு பாரதிதாசன், பிரவீன்குமார் ஆகியோரால் நடத்தப் பட்டது.
பாரதிதாசன் – சூழலியலுக்கும் உயிரினங் களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், நீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். பிரவீன்குமார், வெளவால்களின் வகைகள், அவற்றின் வாழ்க்கை முறை, அவற்றை காக்க வேண்டியதன் தேவை குறித்தும் விளக்கினர்.
கோவையிலிருந்து வந்து முகாமில் கலந்து கொண்ட தமிழீழம், ஓவியா ஆகியோர் பாம்பு களுடன் எவ்வாறு பழக வேண்டுமென்பதையும் விளக்கினார். பின்னர் கொடைக்கானல் பூங்காவிற்குச் சென்று பல்வேறு மலர்களையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டு களித்தனர்.
19.5.2014 : இறுதி நாளான திங்கள் கிழமை காலை முதல் வகுப்பு உணவு முறைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் முதலியவை குறித்து செயல்பாடுகள் வடிவில் கல்பனா ஒருங்கிணைத்தார்.
பின்னர் முகாம் குறித்த நிறைகுறைகள், குழந்தைகள் கற்றுக்கொண்ட செய்திகள், மாற்றப்பட வேண்டியவைகள் என முழுமை யான பின்னூட்டங்கள் குழந்தைகளால் வழங்கப்பட்டு முகாம் நிறைவு பெற்றது.
முகாம் நடைபெற்ற எல்லா நாள்களும் குடியரசு, பிரவீன் ஆகிய விளையாட்டு ஆசிரியர்கள் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி விளையாட்டுகளை சிறப்பாக நடத்தினர். சிவிச் சக்ரவர்த்தி என்ற 14 வயது மாணவர் ஸ்கேட்டிங் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்.
முகாம் நடந்த நாள்களில் ஒருங்கிணைப்புப் பணிகளை தமிழ்ச்செல்வனும், முகாம் செம்மையாக நடைபெறத் தேவையான அனைத்து உதவிகளையும் மணிகண்டன், இராவணன், தாமரைக்கண்ணன், பாலு, அவினாசி ஆகியோர் செய்து கொடுத்தனர். குழந்தைகளின் உடல்நலம் பேண ஓமியோபதி மருந்துகளை திருப்பூர் மருத்துவர் திருவேங்கடம் கொடுத்துதவினார்.
பல்வேறு தோழர்களின் பொருளாதார உதவி யாலும், ஆலோசனைகளாலும், பெற்றோர்கள் ஒத்துழைப்பினாலும் ஒரு இனிய முகாமாக இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முகாம் முடிந்து பேருந்தில் ஏறும்போது குழந்தைகள் ஒருவரை யொருவர் பிரிய மனமின்றி அழுதுகொண்டே அடுத்த குழந்தைகள் பழகு மகிழ்வு முகாமில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் விடை பெற்றனர்.
செய்தி : ஆசிரியர் சிவகாமி

பெரியார் முழக்கம் 10072014 இதழ்

You may also like...

Leave a Reply