வினாக்கள்… விடைகள்…!

பள்ளிகளில் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாட வலியுறுத்தும் மோடி ஆட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு. – செய்தி
அதேபோல், கல்யாணம், கரு மாதி, அர்ச்சனை என்று 365 நாள்களும் சமஸ்கிருத நாளா கவே, காதைத் துளைக்கிறதே, அதையும் சேர்த்து இந்த கட்சிகள் எதிர்க்கக் கூடாதா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடம்பில் சட்டை இல்லாமல் பூணூலுடன் சாமி தரிசனம் செய்தார். – செய்தி
இது ‘ஆன்மிகக் கிளப்’புகளுக் கான ‘டாப்லெஸ்’ (மேலாடை யில்லாத) கலாச்சாரம்; இதில் தலையிடும் அதிகாரம் உச்சநீதி மன்றத் துக்கே கிடையாது. மூச்…

‘மங்கள்யான்’ செயற்கைக் கோள் – திட்டமிட்டப்படி செப் டம்பர் 24இல் செவ்வாய் கிரகத்தை அடையும். – விஞ்ஞானி மயில்சாமி
அச்சச்சோ… மங்கள்யானுக்கு செவ்வாய் தோஷம் புடுச்சிடுமே! உடனே பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தாகணும், ஓய்!

298 பேருடன் பறந்த மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? மர்மம் நீடிக்கிறது.
– செய்தி
ப்பூ… இதைக்கூட கண்டுபிடிக்க முடியாதா; இதோ, நாங்க சொல்றோம்; விமானப் பயணத்தில் சாவு நடக்கணும்னு அவாளோட விதி; அதுதான் சாவுக்குக் காரணம்; புரியுதோ!

வடக்கேபடை அனுப்பி வடவரை வீழ்த்திய இராஜேந்திர சோழன், அங்கிருந்து கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு, தான் தலைநகரில் கட்டிய கோயி லுக்கு நன்னீராட் டினான்.
– ‘தினத்தந்தி’ கட்டுரை
வடவரை வீழ்த்தினாலும், இந்த சோழர்களுக்கு புனிதமாகத் தெரிவது வடநாட்டு கங்கை தான். தமிழ்நாட்டுக் காவிரிகூட அல்ல! என்னடா, தமிழா?

பழனி முருகன் கோயிலுக்கு ‘பட்டா’ இல்லை; 100 ஆண்டு களாக போராடுகிறது ‘தேவ° தானம்’. – செய்தி
பத்திரத்தில் கையெழுத்துப் போட ஆட்சியர் அலுவலகத் துக்கு முருகன் வந்திருந்தால், பிரச்சினை எப்போதோ முடிஞ் சிருக்கும்.

முருகன் கோயிலைச் சுற்றி மருத மலையில் சிறுத்தைகள் நட மாட்டம்; கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு பக்தர் கள் கோரிக்கை. – செய்தி
இதுக்கெல்லாம் முருகனிடம் கோரிக்கை வச்சா எதுவும் நடக்காதுன்னு, பக்தர்களுக்கு நல்லாவே புரியுது! முருகன் மீது அம்புட்டு நம்பிக்கை!

பெரியார் முழக்கம் 24072014 இதழ்

You may also like...

Leave a Reply