கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு – தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் – கோவை செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கிடும் பொதுக் கூட்டங்கள், தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் : ஜூலை 30 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டக் கழக சார்பில் கூடுவாஞ்சேரி அரசு பயணியர் மாளிகையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 4 மணியளவில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக தோழர்களுடன் கலந்து ஆலோசித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட தோழர்களை அறிவித்தார். மாவட்டத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட அமைப்பாளர் தெள் அமிழ்து, துணைத் தலைவர் ராஜ் குமார், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்து கூடுவாஞ்சேரியில் பட்டுக்கோட்டை அழகிரி, இரட்டை மலை சீனிவாசன், காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, தமிழ்மாறன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர்.
சென்னையில்
ஜூலை 31 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் இராயப்பேட்டை முருகேச நாய்க்கர் திருமண மண்டபத்தில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர், பொதுச் செய லாளர், பொருளாளர், செயலவைத் தலைவர், பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், மண்டல செயலாளர் அன்பு தனசேகர் மற்றும் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு
8 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலையான கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் கழகத்தின் அனுமதியின்றி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கழகத்துக்கு உடன்பாடு இல்லாத வடிவத்தில் நடத்திய போராட்டத்துக்காக தங்கள் வருத்தத்தை கடிதம் மூலம் தெரிவித்ததால் அவர்கள் மீதான தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கழகப் பொறுப்பாளர்கள் உரையைத் தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
31.7.2014 வியாழன் மாலை 6 மணியளவில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் முறைகேடான அகில இந்திய தேர்வுகளை இரத்து செய்து மாநில அளவிலான தேர்வுகளை நடத்த வலியுறுத்தி சென்னை ஓட்டேரி எ°.எ°.புரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. புரசைவாக்கம் பகுதி பொறுப்பாளர் ந.தட்சணாமூர்த்தி தலைமை வகிக்க, ச.ஏசுகுமார், ப.முனுசாமி முன்னிலை வகித்தனர். அருள்தாசு வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடக்கமாக சம்பூகன் கலைக் குழுவின் தோழர்கள் நாத்திகன், சரவணன், நாகேந்திரன், அருள்தாசு ஆகியோர் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களைப் பாடினர். தொடர்ந்து, இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், வழக்கறிஞர் துரை. அருண், பொருளார் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி ஆகியோர் பேசினர். தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர்.
ஏ. விஜயன் நன்றி கூறினார். தலைமை நிலைய செயலாளர் தபசி. குமரன் பங்கேற்றனர்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் சிலர் கூட்டத்தை நிறுத்தக் கோரி கூச்சலிட்டனர். கூச்சலிட்ட கும்பலை காவல்துறையினர் விரட்டினர். எந்தவித சலனத்துக்கும் அஞ்சாமல் கூட்டம் 10 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
வேலூரில்
ஆக°டு முதல் தேதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழின உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம் ஏ.டி.ஜி. கவுதமன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகளோடு கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் தோழமை அமைப்புத் தோழர்கள் சா.குப்பன், சிங்கராயர், கன்.மோகன், சு.விசுவநாதன், ச.ந.ச. மார்த்தாண்டன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட தலைவர் திலீபன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஆக°டு 2 ஆம் தேதி இராயக்கோட்டை எ°.எம். திருமண மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயலவைத் தலைவர், பரப்புரை செயலாளர், மண்டல அமைப்புச் செயலாளர் அ.சக்திவேல் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாக தோழர்களுடன் கலந்து ஆலோசித்து, கீழ்க்கண்ட தோழர்களை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர் தி. குமார், மாவட்ட செயலாளர் கா. குமார், மாவட்ட அமைப்பாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் கிருட்டிணன், மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன், பொருளாளர் மைனர் என்கிற வெங்கட கிரியப்பா, கொலமங்களம் ஒன்றிய பொறுப்பாளர் சங்கர், தேன்கனிக் கோட்டை அமைப் பாளர் அனுமந்தப்பா. கூட்டத்தில், தமிழக முதல்வரை இழிவுபடுத்தி இணைய தளத்தில் படமும் கட்டுரையும் வெளியிட்ட சிறீலங்கா அரசுடனான தூதரக தொடர்பை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இராஜபக்சேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் பா.ஜ.க. ஆலோசனைக் குழு தலைவர் சுப்ரமணியசாமி மற்றும் வெளியுறவுத் துறைக்கான ஆலோசகர் சேஷாத்திரி சாரி ஆகியோரைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தோழர்கள் அனை வருக்கும் மாவட்டக் கழகத் தோழர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை 5 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் பழனி தலைமையில் நடைபெற்றது. காஞ்சி மக்கள் மன்றம் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் தி.குமார், மாநில பொறுப்பாளர்கள் ஈரோடு இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, பால். பிரபாகரன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பில் தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக் கூட்டத்தில் நாட்டில் கனிம வளங்களை சூறையாடும் பன்னாடு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் ஆபத்துகளை மக்கள் மீது திணிக்கும் அணுஉலைக் கூடங்கள், மக்களுக்கு எதிரான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விளக்கி, தோழர்கள் பேசினர். கழகத் தோழர் பழனி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனி°ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், ‘கிரானைட்’ எடுக்கும் நிறுவனங்களை நடத்தி, அதனால் அரசுக்கு ஏற்படுத்திய வருவாய் இழப்புகளை ஆதாரங்களுடன்
கழகத் தலைவர் அம்பலப்படுத்தினார். இரவு 9 மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. (உரை அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 07082014 இதழ்

You may also like...

Leave a Reply