ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமம் எனப்படும் ளுவயகக ளுநடநஉவiடிn ஊடிஅஅளைளiடிn மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும். இக்குழுமம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்துகிறது.
2006 வரை மண்டல அளவிலேயே இப் பணியமர்த்தும் நடவடிக்கைகளை இக் குழுமம் மேற்கொண்டு வந்தது. (இந்திய அளவில் 7 மண்டலங்களாக இக்குழுமம் செயல்பட்டு வருகிறது ). இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளில் கிடைத்து வந்தது.
2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் அகில இந்திய அளவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என கூறியிருந்தாலும்கூட 50 சதவீதப் பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய அரசின் பணியாளர் நியமனத்துக்கான அமைச்சகத்திற்கு ஒரு பரிந்துரையை செய்தது. இப்பரிந்துரையைக் கூட கணக்கில் கொள்ளாத இந்திய அரசு உடனடியாக அனைத்து நிலையிலான தேர்வு களையும் அகில இந்திய அளவில் நடத்த உத்தரவிட்டது.
இவ்வாறு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் பணியமர்த்தப்படு வது முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவேளையில் சென்னையில் உள்ள வருமான வரி உணவகத்திற்கு வந்தால் தமிழ் நாடா அல்லது வடநாடா என்ற அளவிற்கு பீகார், உ.பி-யை சேர்ந்தவர்கள் நிரம்பி இருப்பார்கள்.
பீகார் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங் களைச் சேர்ந்தவர்களே இங்கு அதிக அளவில் பணி அமர்த்தப்படுகின்றனர். இதற்கு அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களை விட அதிக மதிப்பெண்களை நுழைவுத் தேர்வு களில் பெறுகிறார்கள் என ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. அம்மாநிலங் களில் நிலவும் அளவுக்கதிகமான வேலை வாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் மோசடிகள் புரிந்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பணிகளை லக்னோ, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் செய்யத் தொடங்கின. இதற்கு குழுமத்தில் உள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு கையூட்டு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டன.
நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுக்கு முன்னரே வெளியிட்டுவிடுவது, தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு கால அளவை கூடுதாக அளிப்பது, பணி நியமனத்திற்கு பணம் அளித்தவர்களை ஒரு குறிப்பிட்ட மையங் களில் மட்டுமே தேர்வெழுத வைத்து அவர்களுக்கு வினாக்களுக்கான விடையை அளித்து தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது என பல முறைகேடுகளை இப்பயிற்சி நிறுவனங் கள் அரங்கேற்றுகின்றன. ஒரே வீதியை சேர்ந்த பலர் பீகரில் இருந்தும் உ.பி-யில் இருந்தும் முறைகேடாக தேர்ந்தடுக்கப்பட்டு தமிழகத் தில் உள்ள மத்திய அரசு துறைகளில் இன்றும் பணியாற்றி வருகின்றனர் என்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
இதில் உச்சகட்ட மோசடி கடந்த ஆண்டு வெளியுலகத்திற்கு தெரியவந்தது. இக்குழுமத் தினால் கணிசமான மாதச் சம்பளம் உள்ள வருமான ஆய்வாளர், சுங்கத் துறை தடுப்பு அதிகாரி, சுங்கத் துறை மதிப்பீட்டாளர் மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஊழுடுநு-2013 (ஊடிஅஅடிn ழுசயனரயவந டுநஎநட நுஒயஅ-2013) என்ற பெயரில் நடத்தப்பட்ட தேர்வுகள் பீகாரில் உள்ள 7 மையங்களில் வினாத்தாள்கள் வெளி யானதால் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படாமல் கடந்த ஓர் ஆண்டாக நிறுத்தப்பட் டிருந்தது. முறைகேடுகளை விசாரித்த நீதிமன்றம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இத் தேர்வை ரத்து செய்து கடந்த ஏப்ரல் 2014ல் இத்தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டன.. இதற்கு முன்னர் இதேபோல முறைகேடாக தேர்வுகள் நடந்து வெளிச்சத்துக்கு வராமல் மறைக்கப்பட்டு வந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் இத் தேர்வுகளின் வினாத்தாள்கள் அனைத்தும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் இருப்பதால், இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு வினாக்களை எளிதில் புரிந்து கொண்டு விடையளிப்பதும் எளிதாக இருக்கிறது. மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத் தில் மட்டுமே விடையளிக்க வாய்ப்புகளை இந்திய அரசு ஏற்படுத்திருப்பது இந்தி பேசும் மக்களுக்கு சாதகமாக உள்ளது. அய்.ஏ.எ°., அய்.பி.எ°., பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் மத்திய தேர்வாணையம்கூட தேர்வுகளை தமிழில் நடத்துகிறது ஆனால் மக்களிடையே நேரடியாக தொடர்பு கொண்டு களத்தில் பணியாற்றும் இப்பணிகளுக்கு நாம் பலமுறை வலியுறுத்தியும் இந்திய அரசானது தமிழில் தேர்வுகளை நடத்த மறுக்கிறது.
இவ்வாறு இந்திபேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சிறு நகரங் களுக்கும், மாவட்ட தலை நகரங்களுக்கும் பணியமர்த்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்கள். இதனால் தமிழகத் தில் இந்தி மட்டுமே தெரிந்த வேற்று மாநில பணியாளர்களிடம் இந்தி தெரிந்தால் மட்டுமே அவ்வலுவலகங்களுக்கு செல்ல முடியும் என்ற அவல நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இவ்வாறு இந்தி பேசும் பணியாளர்களை வைத்துக்கொண்டு நிர்வாகத்தை நடத்துவதில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றன. வேற்று மாநிலத்தில் இருந்து பணியாற்ற வரும் ஊழியர்கள் மீண்டும் தமது மாநிலத்திற்கே செல்ல பணியிட மாற்ற விண்ணப்பம் செய்து அப்பணியிட மாற்றத் திலேயே குறியாக இருப்பதால் பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர். பணியிட மாற்றம் கிடைத்த பின்பு காலியாகும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவது இல்லை அவ்வாறு நிரப்பப்பட்டாலும் அதிலும் இந்தி பேசுபவர்களே மீண்டும் வருகிறார்கள். இவற்றைக் களையக்கோரி சம்பந்தப்பட்ட மத்திய அரசின் தலைமை அதிகாரிகளே பலமுறை இந்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பதிலிருந்து நிர்வாக நெருக்கடிகளைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே இந்திய அரசின் இப்போக் கினை கண்டித்து, முறைகேடான மோசடி யான பணி நியமனங்களை எதிர்த்து தமிழர் களின் வேலை வாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டிட இந்திய அரசை வலியுறுத்தி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைக் குழுமம் மாநில அளவிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும்; தேவையானால் அதற்கென அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனபதை மய்ய கோரிக்கையாக வலியுறுத்தியும்,
இந்திமொழி இடம் பெற்றிருப்பது போல அவரவர் தாய்மொழியிலும் வினாத் தாள்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியும்
வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி சென்னையில் உள்ள தென்மண்டல மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படு கிறது.
மத்திய அரசுப் பணிகளில் தமிழர் வேலை வாய்ப்புப் பறிப்பு எதிர்ப்பு கூட்டியக்கம்

பெரியார் முழக்கம் 03072014 இதழ்

You may also like...

Leave a Reply