வினாக்கள்… விடைகள்…!

நாட்டில் நிதிநிலை மோசமாகி விட்டது; வரி விதிப்பின் மூலம் தான் ஓரளவு சரி செய்ய முடியும். – நிதியமைச்சர் அருண் ஜெட்லி
வணிகவரி, வருமான வரி அலு வலகங்களைப்போல் “மோச மான நிதிநிலையை சரிப்படுத் தும் வரி” அலுவலகங்களையும் நிரந்தரமாக தொடங்கிடுங்க…!

குற்ற வழக்குகளில் ஆளுநர் களை விசாரிக்கும் உரிமை நீதி மன்றங்களுக்குக் கிடையாது.
– ஆளுநர் ஷீலா தீட்சத்
ஏன், சுற்றி வளைச்சுப் பேசுறீங்க மேடம்… செய்த ஊழல்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம்தான் கவர்னர் பதவின்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே?

நாடாளுமன்றத்தில் விலை வாசி உயர்வு பற்றி நடந்த விவாதத் தின்போது ராகுல் காந்தி தூங்கியதாக பா.ஜ.க. புகார். – செய்தி
கூச்சல், குழப்பம் இல்லாம அமைதியாக தூங்குவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் ‘ஜன நாயகத்துக்கு’ நேரம் கிடைக் குதே; அதுக்காக பெருமைப் படுங்க…

ட போலி என் கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு பா.ஜ.க. தலைவர் பதவி. -செய்தி
அதுக்காக உண்மையான என் கவுன்டர்களை நடத்தாமல் இருந்தால் சரி.

இந்து மக்கள் கட்சியினர் இந்து தர்மத்தின்படி வேல், பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும். – அர்ஜுன் சம்பத்
ஆமாம்! இனியும் நாம் வணங்கும் கடவுள்கள் நம்மைக் காப்பாற்ற வருவார் என்று எவரும் கற்பனையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிப்பு; மோடி மீது எதிர்க் கட்சிகள் புகார். – செய்தி
ஆவணங்கள் அழிந்தாலும், ஆவணங்களின் ஆன்மாவை அழிக்க முடியாது என்ற பகவான் கிருஷ்ணனின் கீதை உபதே சத்தைத்தான் மோடி செயல் படுத்துகிறார், புரியாமப் பேசாதீங்க!

1939இல் மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசத்துக்கு துணை நின்றவர், முத்துராமலிங்க தேவர். – தேவர் பேரவை அறிக்கை
அன்றைக்கே தேவர் காட்டிய அந்த நல்ல வழியை இன்றைக்கு தொடரக் கூடாதா?

பெரியார் முழக்கம் 17072014 இதழ்

You may also like...

Leave a Reply