நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் கோவை செயலவையில் நிறைவேற்றிய தமிழர் உரிமை பறிப்புகள் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கி நாடு முழுதும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பரப்புரைச் செயலாளர், செயலவைத் தலைவர், மாணவரணி பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
முதல்கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி பழனி யிலும், 16 ஆம் தேதி காரைக்குடியிலும், ஜூலை 18 ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத் திலும் நடைபெற்றது. இரண்டாம் சுற்றுப்பயணம் ஜூலை 23இல் மன்னார்குடியிலும், 24 ஆம் தேதி மயிலாடு துறையிலும், ஜூலை 26 ஆம் தேதி சின்ன சேலத்தி லும் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கட்டமாக ஜூலை 30 ஆம் தேதி காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும், ஜூலை 31 ஆம் தேதி சென்னை ஓட்டேரியிலும், ஆக°டு முதல் தேதி வேலூரிலும், ஆக°டு 2 ஆம் தேதி கிருட்டிணகிரி மாவட்டம் இராயக் கோட்டையிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. நான்காம் கட்டமாக ஆக°டு 6 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூரிலும், ஆக°டு 7 ஆம் தேதி திருச்சியிலும், ஆக°டு 8 ஆம் தேதி கரூரிலும், 9 ஆம் தேதி திருச்செங்கோட்டிலும், 10 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சிவகிரியிலும் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியுடன் நடந்தன. கூட்டங்கள், கருத்தரங்குகள்போல் மக்களிடம் கருத்துகளை விதைத்தன; விளக்கம் பெற்ற மக்கள் பேராதரவு காட்டினர். செய்தி விவரம்:
ஆத்தூர் : ஆத்தூரில் ஆக°டு 6 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பறை இசையுடன் கூட்டம் தொடங்கியது. சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் பிரபு வரவேற்புரையாற்றினார். சேலம் மண்டல செயலாளர் அ.சக்திவேல் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். கூட்டத்தை முன்னின்று தோழர்களுடன் ஒருங் கிணைந்து நடத்திய மாவட்ட துணைச் செயலாளர் ந.மகேந்திரன் நன்றி கூறினார். முன்னதாக அண்ணா கலையரங்கக் கூடத்தில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் நகரத் தலைவராக ந.மகேந்திரனும், செயலாளராக கணபதியையும் கழகத் தோழர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிவித்தார். கழகப் பொருளாளர் இரத்தினசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
திருச்சி, பெரம்பலூர் : ஆக°டு 7 ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் ஆரோக்கிய சாமி தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார், சிறீரங்கம் நகர கழகத் தலைவர் பெரியார் தொண்டர் எ°.எ°.முத்து, மாநகர கழக அமைப்பாளர் தமிழ்முத்து, மாவட்ட அமைப்பாளர் குணாராஜ், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் டார்வின்தாசன் நன்றி கூறினார். முன்னதாக நடந்த மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.
திருச்சி – மண்டல அமைப்பு செயலாளர் – த. புதியவன்; மாவட்டத் தலைவர் மீ.இ.ஆரோக்கியசாமி; மாவட்ட துணத் தலைவர் டார்வின் தாசன்; மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார்; மாவட்ட அமைப்பாளர் குணாராஜ்; மாநகர அமைப்பாளர் தமிழ்முத்து; மாவட்ட பொருளாளர் மனோகரன்; மண்ணச்ச நல்லூர் ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார். பெரம்பலூர் – மாவட்டத் தலைவர் தாமோதரன்; மாவட்ட அமைப்பாளர் பழனி; நகர செயலாளர் ராஜேஷ்குமார்.
கரூர் : ஆக°டு 9 ஆம் தேதி கரூர் உழவர் சந்தை எதிரில் விளக்கப் பொதுக் கூட்டம், பறை இசையுடன் தொடங்கியது. மாவட்டத் தலைவர் முகம்மது அலி எனும் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா. காமராசு வரவேற்புரையாற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் அக்னி இல. அகரமுத்து, ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த முல்லையரசு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சார்ந்த பழனிச்சாமி, ஈரோடு மண்டல செயலாளர் இராம. இளங்கோவன், கழக பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். முத்து நன்றி கூறினார். முன்னதாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.
தலைவர் – முகமது அலி (எ) பாபு, துணைத் தலைவர் – சத்யசீலன் (குளித்தலை), செயலாளர் – காமராஜ் (கிருட்டிணராயபுரம்), பொருளாளர் – மோகன்தாஸ் (கடவூர்), அமைப்பாளர் – சண்முகம் (சின்னதாராபுரம்). கிருட்டிணராயபுரம் ஒன்றியத் தலைவர் – ஸ்ரீகாந்த், செயலாளர்-ரஞ்சித். கடவூர் ஒன்றியம் அமைப்பாளர் விஜி. க.பரமத்தி ஒன்றியம் – இரா. வடிவேல்.
திருச்செங்கோடு: ஆக°டு 9 ஆம் தேதி மாலை திருச்செங்கோட்டில் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய போது மழைத் தூறத் தொடங்கியது. மழையிலும் கூட்டம் தொய்வின்றி நடந்தது. நகர கழகத் தலைவர் மு.சோம சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.வெ.செந்தில் குமார், நாமக்கல் மாவட்டக் கழகத் தலைவர் மு.சாமிநாதன், மண்டல செயலாளர் கோபி. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரை யாற்றினர். முன்னதாக பிற்பகல் 5 மணியளவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகப் பொறுப் பாளர்களாக கீழ்க் கண்ட தோழர்களை கழகத் தலைவர் அறிவித்தார்.
தலைவர் – மு.சாமிநாதன் (குமாரபாளையம்), துணைத் தலைவர் – திராவிடமணி (குமாரபாளையம்), செயலாளர் – மா.வைரவேல் (திருச்செங்கோடு), துணைச் செய லாளர் – மோகன் (குமாரபாளையம்). ஆட்டையாம் பட்டி ஒன்றிய அமைப்பாளர் த.சங்கர். திருச்செங் கோடு நகரத் தலைவர் – மு.சோம சுந்தரம், செயலாளர் து.சதீஷ்குமார். குமார பாளையம் நகரத் தலைவர் மீ.தண்டபாணி, செயலாளர் சி.வெங்கட், துணைச் செய லாளர் செ.வடிவேல், துணைத் தலைவர் சி.ரு. அண்ணாதுரை. மல்ல சமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர் ந.கண்ணன், ஒன்றிய செயலாளர் சு.பெரியண்ணன்.
சிவகிரி : ஆக°டு 10 ஆம் தேதி ஈரோடு மாவட்ட சார்பில் சிவகிரியில் விளக்கக் கூட்டம் பள்ளத்தூர் நாவலரசு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாவட்ட அமைப் பாளர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்றினார். ஈரோடு மண்டல செயலாளர் கோபி. இளங்கோவன், பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். உரைகளுக்கு இடையே இசை நிகழ்ச்சி நடந்தது. மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஈரோடு கழக இணையர்கள் காவாலாண்டியூர் கிருட்டிணன்-மணிமேகலை பெண் குழந்தைக்கு நிறைமதி என்று கழகத் தலைவர் பெயர் சூட்டினார். பெயர் சூட்டல் மகிழ்வாக இணையர் ரூ.1000 கழகத்துக்கு நன்கொடை வழங்கினர். முன்னதாக சிவகிரி திருமண மண்டபத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெறறது. மாவட்ட பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.
ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் – செல்லப்பன் (சென்னிமலை), செயலாளர் – சண்முகபிரியன் (ஈரோடு), பொருளாளர் – சுகுணா (ஈரோடு). அமைப்பாளர்கள் : பா. குமரன் (மறவப்பாளையம்) மற்றும் செல்வராஜ் (சென்னிமலை). ஈரோடு நகரத் தலைவர் – திரு முருகன், துணைத் தலைவர் – சத்யமூர்த்தி, செயலாளர் – சிவானந்தம். சென்னிமலை ஒன்றியத் தலைவர் ரமேஷ் குமார், செயலாளர் அழகன். கொங்கம்பாளையம் கிளைத் தலைவர் சத்யராஜ். சி.எம். நகர் கிளை பொறுப்பாளர் பிரபு. தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர் ப.சிவக்குமார் (ஆசிரியர்), மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் (ஆசிரியர்). மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்ரமணி (வைராபாளையம்), பெருமாள் மலை கிளை தலைவர் ராசன்னா.
5ஆம் கட்ட பரப்புரைப் பயணம் கோவை மேட்டுப் பாளையத்தில் ஆகஸ்டு 16இல் தொடங்குகிறது.
நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 14082014 இதழ்

You may also like...

Leave a Reply