ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள்
தமிழின உரிமை மீட்பு தொடர் கூட்டங்கள்; அகமணமுறை எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கிராமம்தோறும் வாகனப் பரப்புரைப் பயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் என்று ஒரே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு பகுதிகளில் பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. 50க்கும் மேற்பட்ட கழகச் செயல் வீரர்கள் இந்தத் தொடர் பரப்புரை இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்று களப்பணியாற்றி வருகிறார்கள்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை செயலவைத் தீர்மானங்களை விளக்கும் பரப்புரைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக ஜூலை 15 – பழனி, ஜூலை 16 – காரைக் குடி, ஜூலை 18 – நெல்லை மாவட்டம், பாவூர் சத்திரத்திலும் நடந்தது. இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் ஜூலை 23 ஆம் தேதி மன்னார்குடியிலும், ஜூலை 24 – மயிலாடுதுறை யிலும், ஜூலை 26 -சின்ன சேலத்திலும் நடந்தது. மூன்றாம் கட்டப் பயணம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சிவக்குமார் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். ஆக°டு 18 வரை இது நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் இயக்கும் மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதத்துக்கு மேல் உ.பி., பீகார் மாநிலங்களைச் சார்ந்தவர்களே குவிந்து வருவதையும், வடமாநிலங்களில் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஊழல் முறைகேடு களால் திட்டமிட்டு இவைகள் நடத்தப்படுவதையும், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட அகில இந்திய தேர்வாணையத்தை ஒழித்து, மாநில அடிப்படையில் தேர்வாணையம் அமைக்க வலியுறுத்தி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கி உரையாற்றுகிறார். மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கருநாடக மாநிலத்தில் ஆடம்பரத் திருமணங்களுக்கு வரி விதித்து அந்தப் பணத்தை ஏழை மக்கள் திருமணச் செலவுக்கு உதவிடும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போன்ற இரண்டு சட்டங்களையும் தமிழகத் திலும் கொண்டு வரவேண்டும் என்றும் காவிரி மேலாண்மை அமைத்தல் உள்ளிட்ட தமிழின உரிமைகளை வலியுறுத்தியும் தோழர் கொளத்தூர் மணி பேசி வருகிறார்.
பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில், “பார்ப்பன-பனியா பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இந்திய தேசியம் இயங்கி வருவதையும், பனியா-பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார சக்திகளாக பார்ப்பனர்களே இருக்கிறார்கள் என்றும் விளக்கி வருகிறார்.
சம°கிருத வாரம் நடத்துவதற்கான சுற்றறிக்கை ஈழத் தமிழர் பிரச்சினையில் துரோகம், விவசாயம், கல்வி, இன் சூரன்°, மருத்துவத் துறையில், பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறந்துவிட்டு, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சிகளையும் விடுதலை இராசேந்திரன், கூட்டங்களில் விரிவாக விளக்கிப் பேசுகிறார்.
கூட்ட நிகழ்ச்சிகள் விவரம்:
தமிழின உரிமை மீட்புப் பொதுக் கூட்டம் 24.07.2014 அன்று மயிலாடுதுறை, விஜயா தியேட்டர் அருகில் நடை பெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத் தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில பரப் புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கம் தனவேந்திரன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு உரை யாற்றினர். மண்டல செயலாளர் இளையராஜா, மாவட்டத் தலைவர் மகேசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் அன்பரசு ஒருங்கிணைத்தார்.
23.07.2014 புதன் கிழமை மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயலவைத் தலைவர் துரைசாமி, கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பா.சிவக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையேற்றார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் கு.செந்தமிழன் வரவேற்புரையாற்றினார்.
26.07.14 சனிக்கிழமை மாலை சின்ன சேலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, கழகப் பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அ றிவியல் மன்ற செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெற்றிவேல், மாவட்டச் செயலாளர் பெரியார் வெங்கிடு, கரும்புலி தமிழன்பு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திராவிடர் கலைக் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. அகமணமுறையின் பாதிப்புகள் குறித்தும், ஜாதிய கொடுமைகள் குறித்தும் தோழர்களின் நாடகம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அகமண எதிர்ப்பு ஊர்திப் பரப்புரை
இது தவிர, அகமண முறை எதிர்ப்புப் பரப்புரைக் குழுவின் பயணம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக 10 நாள் நடந்தது ஜூலை 18 அன்று பழனியில் பயணம் தொடங்கியது. கிராமங்களில் தோழர்கள் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று ஜாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு தனி இடஒதுக்கீடு கோரும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, கழக வெளியீடுகளை விற்பனை செய்தனர். மாலை நேரங்களில் அகமணமுறையின் சீர்கேடுகளை விளக்கிடும் வீதி நாடகம் நடத்தப்படுகிறது. கிராம மக்கள் திரண்டு வந்து பார்க்கிறார்கள்.
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பரப்புரை
இந்த இரண்டு பரப்புரைகளைத் தவிர, மூடநம்பிக்கைகளை விளக்கி, சேலம் மேற்கு மாவட்டத்தில் கிராமம் கிராமமாக ஊர்திப் பரப்புரைப் பயணம் நடைபெற்றது.
முதற்கட்டமாக நங்கவள்ளி ஒன்றியம், மேச்சேரி, கொளத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து இடங்களிலும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா சதாசிவம் உரையாற்றினார்.
ஜூன் 30 அன்று நங்கவள்ளியிலும், ஜூலை 1 இல் ஜலகண்டபுரத்திலும், 3இல் நங்கவள்ளி பேருந்து நிலையத்திலும், 4இல் மேச்சேரியிலும், 5இல் வெள்ளாரிலும், 6 ஆம் தேதி பொட்டனேரியிலும், 7 இல் கொளத்தூர் மூலக்கடையிலும்,
8இல் செட்டியூரிலும், 9 இல் உப்புக்கல்லூரிலும், 10இல் பெரியார் நகரிலும்,
11இல் கண்ணாமூச்சியிலும், 12 இல் இராமன்பட்டியிலும், 14 இல் பாலமலை செம்மம்பட்டியிலும், 14, 15இல் குருவரெட்டியூரிலும், 17இல் நீதிபுரத்திலும்,
18இல் சின்னதண்டா சி.எஸ்.புரத்திலும், 20ஆம் தேதி பெரியதண்டா பகுதியிலும், 22ஆம் தேதி காவலாண்டியூரிலிருந்தும் மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை பரப்புரைகள் நடந்தன.
அய்யா சதாசிவம் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார். காவை இளவரசன், மேட்டூர் கோவிந்தராசு ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினர். நங்கவள்ளி அன்பு உரை மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினர் இசை நிகழ்ச்சியும், சு.க.ப.க.வினரின் வீதி நாடகமும் ஆங்காங்கே நடந்தன.
அனைத்து ஊர்களிலும் பள்ளி மாணவ மாணவிகள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். கூட்டம் முடிந்த பின்பு பொது மக்களின் வினாக் களுக்கு தெளிவாக விளக்கமளிக்கப் பட்டது. அறிவியல் விளக்க மூட நம்பிக்கை ஒழிப்புப் படங்கள் சி.டி. புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
மக்கள் சந்திப்பு இயக்கம் : இதுதவிர, மக்கள் சந்திப்பு இயக்கத்தையும் திருச்சி, கோவை மாவட்டங்களில் கழகம் நடத்தி முடித் துள்ளது. 3 ஆவது கட்டப் பயணத்துக்கு தயாராகி வருகிறது. கழகம் களப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 31072014 இதழ்