வினாக்கள்… விடைகள்…!
எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம்
அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க!
காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு
நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது!
முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி
அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க!
கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து. – ஆய்வில் தகவல்
அப்ப, கங்கையை தூய்மைப்படுத் தும் திட்டத்துக்கு ‘புற்று நோய் ஒழிப்புத் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செஞ்சிடுங்க.
அரசு திட்டங்கள் மற்றும் சேவை களை ‘மொபைல்’ போன் மூலம் வழங்கி சாதனை செய்த இந்திய அரசுக்கு அய்.நா. விருது அறிவிப்பு. – ‘தமிழ் இந்து’ செய்தி
“நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் – எந்த ‘பொய்-புரட்டு பிரச்சாரத்தையும்’ ஏற்க இயலாத நிலையில் உள்ளார். தயவு செய்து வேறு பொய் எதையாவது கண்டுபிடிக்க வும். அல்லது காத்திருக்க வைக்காமல் ஆளை விடவும் .”
ஹாலிவுட் திரைப்பட உலகில் யூதர்கள் தான் ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யூதர்கள்தான் கடவுளின் முதல் குரலை கேட்டவர்கள்.
– பிரிட்டிஷ் நடிகர் கேரி ஓல்ட்மேன்
அந்தக் குரலுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகரும் யூதர் தானா?
மத்தியில் ஆட்சியில் இருப்பவர் களின் விருப்பத்துக் கேற்ப ஆளுநர் களை மாற்றவோ நீக்கவோ அரசுக்கு உரிமை கிடையாது. – குலாம் நபி ஆசாத்
ஆமாம்! அவுங்கல்லாம், நம்ம ஊர் அர்ச்சர்கள் போல, அரசியல் சட்டம் எல்லாம் செல்லுபடி யாகாது.
கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை மகா விஷ்ணுபோல் சித்தரித்து, அவரது கையில் ‘ஷு’ இருப்பது போல வெளியான புகைப் படத்துக்கு எதிர்ப்பு. விசுவ இந்து பரிஷத் வழக்கு. – செய்தி
பன்றியாக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவையே ஏற்றுக் கொண்டவர்களுக்கு தோனியாக அவதாரம் எடுத்திருப்பதில் தான் அவமானம் வந்துருச்சாக்கும்! அட போங்கப்பா… நீங்களும், உங்க பக்தியும்!
பெரியார் முழக்கம் 03072014 இதழ்