வினாக்கள்… விடைகள்…!
ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன் வெல்த் போட்டிக்குச் சென்ற இந்திய அதிகாரி ‘செக்ஸ்’ புகாரில் கைது. – செய்தி
‘காமன் வெல்த்’ நாடுகளுக்கான போட்டியை ‘காமன்’ போட்டி யாக நினைத்து விட்டார்போல.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஊராட்சி களில் இந்து மத வழிபாடுகளைத் தவிர, வேறு மத வழிபாடுகள் நடத்த அரசு தடை. – செய்தி
அப்ப…! ‘இந்து ராஜ்யம்’ அமைந்து விட்ட இந்த 60 ஊராட்சிகளிலும் இனி வறுமை இல்லை. வளம் கொழிக்கும் ‘தர்மம்’ செழிக்கும்னு சொல்லுங்க.
வகுப்புக் கலவரங்களை ஒடுக்க, 2002இல் குஜராத்தில் மோடி பின்பற்றிய நடைமுறைகளையே நாடு முழுதும் விரிவாக்க வேண்டும். – பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஜி. ரவி
இஸ்லாமியர் இனப் படுகொலைக்கு ‘குஜராத் நடைமுறை’ன்னு பெயர் மாற்றம் செஞ்சுட்டீங்களா?
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1800 கிலோ தங்கம் ‘ஸ்டேட் பாங்ங் ஆப் இந்தியா’ வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது. – செய்தி
இதுக்கு பதிலா தங்கத்தை டால ராக்கி, பங்கு சந்தையில் புரள விட்டா, ஏழுமலையான் வருமானம் பெருகி, அப்படியே ஆன்மிகமும் சேர்ந்து வளருமே! சும்மா, ஒரு யோசனை தான்!
நான் சர்வாதிகாரியாக இருந்தால் மகாபாரதம், கீதையை, ஒன்றாம் வகுப்பிலிருந்து கட்டாயமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். – உச்சநீதிமன்ற நீதிபதி அனில்தவே
ஆமாம்; கீதையைப் படித்தால் தான் இவரது சர்வாதிகாரத்தை மக்கள் எதிர்க்காமல் வேலையை மட்டும் செய்து கொண்டு எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் அப்படியே அடிமைகளாகவே கிடப்பார்கள்!
வேறு மதத்திலிருந்து இந்து மதத் துக்கு வருகிறவர்கள், அவர்கள் விரும்பும் எந்த ஜாதியிலும் சேர லாம்; அதை நான் ஏற்றுக் கொள் கிறேன். – ‘துக்ளக்’கில் ராமகோபாலன்
அது சரி; இந்து மதத்துக்கு உள்ளே இருப்பவர்களுக்கும் விரும்புகிற ஜாதியில் சேருவதற்கு அனுமதி உண்டா? அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா, ‘ஜீ’!
டெல்லி மராட்டிய பவனில் ரம்லான் நோன்பு இருந்த முஸ்லிம் பணியாளர் வாயில் சிவசேனை நாடாளுமன்ற உறுப் பினர்கள் சப்பாத்தியைத் திணித்தனர். – செய்தி
இதில் என்ன ஆச்சரியம்! முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி என்ற பிரிவில் இல்லாத எல்லா மக்கள் தலை களிலும் இதே போல்தானே இந்து மதத்தையும் திணித்தார்கள்.
பெரியார் முழக்கம் 07082014 இதழ்