காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி

அயோத்தியில் ‘ராமன்’ கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பன சக்திகளும், சங்பரிவாரங்களும் பா.ஜ.க. ஆட்சியும், ஏன் துடிக்கின்றன? ‘ராமன்’ மநுதர்மப்படி ஆட்சி நடத்தியதுதான் இதற்குக் காரணம். இதை இறந்துபோன காஞ்சி மூத்த பார்ப்பன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே கூறியுள்ளதை ‘தமிழ் இந்து’ நாளேடு அதன் ஆன்மிகப் பகுதியில் ஜூன் 26, 2014இல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பகுதி இதோ:
“ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்யபாரம் நடத்தவில்லை. தன் அபிப்பிராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்வீகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவா ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசா°த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்” – என்கிறார், மூத்த சங்கராச்சாரி.

பெரியார் முழக்கம் 03072014 இதழ்

You may also like...

Leave a Reply