வினாக்கள்… விடைகள்…!
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும். – ஞான தேசிகன்
அப்படியானால் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் அணிகளுடன்கூட கூட்டணி கிடையாதா?
தமிழ்நாட்டில் ‘தீண்டாமை’ என்பது எல்லாம் அறவே கிடை யாது. – தந்தி டி.வி.யில் மருத்துவர் இராமதாசு
ஓ, அதுக்காகத்தான் ‘திராவிட கட்சிகள்’ தமிழகத்தை நாச மாக்கிவிட்டன என்கிறீர் களா? புரியுது! புரியுது!
இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை நடத்த – அய்.நா. நியமித்த குழு இந்தியா வருவதற்கு மோடி ஆட்சி ‘விசா’ மறுப்பு. – செய்தி
ஸ்ரீராமபிரான் நடத்திய யுத்தத்துக்குப் பிறகு, இலங்கை யில் எந்தப் போரும் நடந்தது இல்லை. இதுவே எங்க வெளிநாட்டு ‘இந்துத்துவா’ கொள்கை! புரிஞ்சுக்குங்க.
ஜாதியமைப்பு மிகச் சிறப்பானது; அதற்கு எதிராக எந்த புகாரும் பழங்காலங் களில் வந்ததே இல்லை. – வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் சுதர்சன் ராவ்
மோடிஜி, இப்படி ஒரு ஆசாமியை எந்தக் காட்டி லிருந்து பிடிச்சுட்டு வந்து இந்தத் தலைவர் சிம்மா சனத்தில் உட்கார வெச் சிருக்கீங்க? வரலாற்றை ஆராய்ந்து கிழிச்சிடுவாரு.
இந்திய மொழிகள் எல்லா வற்றுக்குமே சம°கிருதம்தான் தாய். – மத்திய மனிதவளத்
துறை சுற்றறிக்கை
அப்ப ஒரு ‘டவுட்டு’! தாயான அந்த மொழியை, தாய்க்குலம் கோயில்களில் ஓதுவதற்கு ஏன் தடை போடுறீங்க? சொல்லுங்க… சொல்லுங்க…
இந்த ஆண்டு இறுதிக் குள்ளா வது இராஜேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க வேண்டும்.
– ‘தமிழ் இந்து’வில் ஆய்வாளர் கட்டுரை
எடுக்கலாம்; ஆனால், இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்காதவியை தெலுங்கு நாட்டுக்காரனான கீழைச் சாளுக்கிய அரசனுக்கு திருமணம் செய்து வச்சிருக் கானே! தூய தமிழ்த் தேசிய வாதிகள் இதை ஏற்பார்களா? யோசித்துப் பாருங்க!
பெரியார் முழக்கம் 31072014 இதழ்