வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல்

பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரி ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ என்ற பெயரில் செயல்படும் பா.ம.க. ஆதரவு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் பாலு, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதே போல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்பு களும் வராகி என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரிக் கிறது. ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ சார்பில் வழக்கறிஞர் விஜயன் வாதாடுகிறார்.

பெரியார் முழக்கம் 24072014 இதழ்

You may also like...

Leave a Reply