பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா
கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர் கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 08032012 இதழ்