வீரமணி-மேரி ஜாதி மத மறுப்பு மணவிழா
திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயலாற்றல் மிக்க தோழர் சூலூர் பன்னீர் செல்வம்-தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகன் வீரமணி, பெங்களூர் கழகத் தோழர் ஜார்ஜ்-தாமரை பரணி ஆகியோரின் மகள் மேரி ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு பெங்களூரில் 5.11.2016 அன்று கேப்டன் ஓட்டலில் சிறப்புடன் நடந்தது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். டாக்டர் எம். வெங்கடசாமி, முனியன் சின்னப்பா, ‘தலித் சமரசேனா’ அமைப்பைச் சார்ந்த கணேஷ் கோலகிரி, கண் மருத்துவர் சுரேந்தர், பெங்களூர் பல்கலைப் பேராசிரியர் முனைவர் சமந்தா தேஷ்மானே, மகாதேவ பிரசாத், வழக்கறிஞர் துரை அருண், கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராஜன், கழக அமைப்பாளர் இல. பழனி, பெங்களூர் கழகத் தோழர்கள் சித்தார்த்தன், இராவணன், தயாளன், குமார், வேலு, இராமநாதன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தர்ராஜன், வெற்றிச் செல்வன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
பத்திரிகையாளர்கள் ஜெயராணி, கவிதா முரளிதரன் நிகழ்வில் பங்கேற்றனர். ‘கற்பி ஒன்று சேர்’ அமைப்பைச் சார்ந்த என்.நாக ரத்தினா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
பெரியார் முழக்கம் 17112016 இதழ்