ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

16807547_1894213827529175_8111192710176354686_n

You may also like...