லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.