‘காவல்’ தரும் காவலாண்டியூர்
மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந் துள்ள காவலாண்டியூர் கிராமம், கழகக் கட்டமைப் புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே ‘காவல்’ அடையாளத் தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. குடும்பத் தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராள மான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டி யூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டி யூர்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு, ‘இனி நமக்குப் பயமில்லை’ என்று அவர்கள் கூறுவதாக அந்தக் காட்சி இருக்கும்.
காவலாண்டியூரில் கடும் எதிர்ப்புக்கிடையே கழகம் கால்பதித்து வளர்ந்த நிகழ்வுகளை காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் முகாமில் நினைவு கூர்ந்தார். தோழர்கள் சித்துசாமி, ஈசுரவன், சுப்ரமணியம் ஆகியோர் முன்னின்று கழகத்தை உருவாக்கிய போது, கடும் எதிர்ப்பு இருந்தது. அப்படி எதிர்ப்பு தெரிவித்த குடும்பத் தினரின் அடுத்த தலை முறையினர் முழுவதுமாக கழகத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருவதை சுட்டிக் காட்டி னார்.
கழகத்துக்காக நிரந்தரமாக கட்டிடம் ஒன்றை உருவாக்கி அங்கே பெரியார் படிப் பகத்தை நடத்தி வருகிறது, காவலாண்டியூர் திராவி டர் விடுதலைக் கழகம்.
இந்த ஊரிலிருந்து தோழர்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாமில் பங்கேற்றனர்.
பயிலரங்க ஏற்பாட்டுக் குழுவினர்
பாலமலை பயிலரங் கத்துக்கான ஏற்பாடு களை அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, ஈசுவரன், காவை. இளவரசன், பழனிசாமி, பாலமலை குமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர் நாத்திக ஜோதி, குமரப்பா ஆகியோர் முன்னின்று செயல்பட்டு பயிலரங்கை சிறப்புடன் நடத்தி முடித்தனர்.
பெரியார் முழக்கம் 26052016 இதழ்