Category: பெரியார் முழக்கம் 2017

காந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா

பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின்...

பார்ப்பன பண்ணயம் கேட்பாரில்லை பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா?

வங்காளிப் பார்ப்பனர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது. ‘பார்ப்பன தர்மத்தோடு’ வாழ்ந்தவர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக காஞ்சிபுரம் வந்து, சங்கராச்சாரியிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். ஜெயேந்திர சரசுவதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி. புதுவை நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். புதுவை நீதிபதியிடம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க தொலைபேசியில் பேரம் பேசியவர் ஜெயேந்திரர். இது ஆதாரத்துடன் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் வழக்காக பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்றும்  கேட்டு, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஜெயேந்திரனைக் காப்பாற்ற முயன்ற சக்திகளின் தலையில் குட்டு வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தான் குடியரசுத் தலைவர் ஜெயேந்திரனிடம் ஆசி பெற வந்திருக்கின்றார். ஜெயேந்திரனிடம்...

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே! முதல்வர் வீடு முற்றுகை: 2000 பேர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வின் பினாமியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17.6.2017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர் களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாது காப்பு சட்டம், UAPA என அடக்கு முறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் தோழர்கள்...

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’; தோளில் பிறந்தவர்கள் ‘சத்திரியர்’; தொடையில் பிறந்தவர்கள் ‘வைசியர்’; காலில் பிறந்தவர்கள் ‘சூத்திரர்’ இவர்கள் அடிமையான வர்கள் என்று சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட்டு வருகிறது பார்ப்பனியம். “சூரிய சந்திரன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருவது ஆரிய இனம்; இதற்கு தோற்றமே இல்லை. நாம் எல்லோரிலும் உயர்ந் தவர்கள்” என்று கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின்  வேத கலாச்சாரமே ‘பாரத’த்தின் கலாச் சாரம். ‘அவாளி’ன் சமஸ்கிருதப் பண்பாடே புனித மானது” என்று இப்போதும் பார்ப்பனியம் வரலாற்றைக் கட்டமைக்கிறது. அனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கும் ஆய்வு சர்வதேச விஞ்ஞானிகளால் இப்போது கண்டறியப்பட் டுள்ளது. பிரிட்டன் ஹர்ட்டர்ஸ் ஃபீல்டு பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு 3 மாதங்களுக்கு முன்பு விஞ்ஞான ஆய்வு இதழில் (bmc Evolutionary biology) வெளியிடப்பட்டு உலகம்...

கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

கருவிலேயே வேதப் பண்பாட்டை ஊட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஆரோக்கிய பாரத்’ அமைப்பு, கருவிலேயே இந்து மதநெறியோடு குழந்தைகள் பிறக்க – வேத மந்திர பயிற்சி அளிக்கிறதாம். அண்மையில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் ஒரு விசித்திரமான, வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம், சட்ட அதிகாரி நாசிப்கான் தொடுத்த பொது நல வழக்கு தான் அது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுகாதாரப் பிரிவு “ஆரோக்கியா பாரத்” அமைப்பு பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தியுள்ளது. அந்தப் பயிற்சிப் பட்டறையின் குறிக்கோள், கணவன் -மனைவியரை அழைத்து அவர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் தருவார்களாம். அறிவுக்கு பொருந்தாத இப்பயிற்சியை தடுக்க வேண்டும் என்பதே வழக்கு! கருவிலேயே இருக்கிற குழந்தையை தூய்மைப்படுத்துவது இதன் உள்நோக்கம் கருவிலேயே குழந்தையை அறநெறியோடு இந்துமத நெறியோடு இந்துமத தூய்மை யோடு குழந்தையை உருவாக்கி பிறக்க வைப்பது. அடுத்து கணவனை, மனைவியை அந்தத் தம்பதிகளின் மனப் பக்குவத்தை ஆய்ந்து பாரம்பரியமான இந்துத்துவ சடங்காச்சாரங்களைக் கற்றுக் கொடுத்து பிறக்கும்...

‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்

‘இந்து தர்மம்’ உருவாக்கிய ‘தேவதாசி’ முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்

இந்து மதம் உருவாக்கிய ‘தேவதாசி’ முறை தடைச் சட்டங்கள் வந்த பிறகும் ஒழியவில்லை; பசு மாட்டைக் காப்பாற்ற துடிக்கும் கூட்டம், பெண்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு பற்றி கவலைப்படுவதே இல்லை. பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணி களை அர்ப்பணிப்போடு செய்து வந்தவர்கள் தேவதாசிகள். ஆனால் ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களைப் பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசி முறை. அதிலும் கடந்த நூற்றாண்டில் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுச் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டுக் கீழ்த்தரமாக அவர்கள் நடத்தப்பட்டார்கள். முத்துலட்சுமி ரெட்டி, பெரியார்,  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோரின் மிக நீண்ட சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. “இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகையால் இவ்வழக்கம் பெண்களின் கவுரவத்தைப் பெரிதும் பாதிக்கக்...

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

ஜாதி-இந்துத்துவ எதிர்ப்பை உள்ளடக்கியதே சரியான பொருள் முதல்வாதம்

பெரியார் ஒரு வித்தியாசமான பொருள் முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல, அப்படி வரையறுப்பது தவறு. மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி) சாதி, கற்பு போன்ற ஆதிக்கச் சொல்லாடல்களை மட்டுமில்லாமல், காதல், தொண்டு, பொதுநலம் போன்ற சொல்லாடல்களையும் நிராகரித்த பெரியார், இந்தியத் தத்துவ மரபில் சொல்லப்படும் விதண்டா வாதியா? காதல், தொண்டு, பொதுநலம் போன்றவற்றை மிகைப்படுத்தும் போதுதான் பெரியார் நிராகரித்து எழுதியுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் அவர் முழுக்கவும் நிராகரிக்கவில்லை. இவற்றின் நியாயமான அர்த்தப்பாட்டில் அதனை அங்கீகரிப்பார். சாதி, வருணம், மதம் பற்றிப் பேசும் போதெல்லாம், அவை வெறும் சுயநலக்காரர் களுடைய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன, இலாபங்களுக்காக உருவாக்கப்பட்டன. இவை யெல்லாம் எந்தவித பொதுநோக்கங்களும் இல்லாதவை என்று நிராகரிப்பார். இது போன்று காதல், தொண்டு, பொதுநலம்...

தாக்கப்பட்ட அய்.அய்.டி. மாணவரை கழகத் தலைவர் நலம் விசாரித்தார்

சென்னை ‘அய்.அய்.டி.’ நிறுவனம் பார்ப்பனக் கோட்டையாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்துக்கு தயாராகும் மாணவர் சூரஜ் – வளாகத்தில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து 80 அய்.அய்.டி. மாணவர்களை ஒன்று கூட்டி மாட்டிறைச்சி விருந்து நடத்தினார். அடுத்த நாள் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சூரஜ்ஜை – ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் மூர்க்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தினர். வானகரம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, கடந்த ஜூன் 3ஆம் தேதி இரவு 8 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்து நலம் விசாரித்தனர். தபசி. குமரன், வேழவேந்தன், வழக்கறிஞர் துரை அருண், குகன், வே. மதிமாறன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். பெரியார் முழக்கம் 15062017 இதழ்

பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்

பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்

பசு மாட்டைக் காப்பதற்கு மோடி ஆட்சி சட்டங்களைத் திணிக்கிறது. பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் சமூக விரோத சக்திகள் பல மாநிலங்களில் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சியின் ஆதரவுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘இந்துத்துவா’ எனும் கொள்கைகளை உருவாக்கி தந்தவரும் – சங்பரிவாரின் குருவாக மதிக்கப்படுபவருமான சாவர்க்கார் – பசுவை தெய்வமாக வணங்குவதை எதிர்த்தார். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 9, 2017), ‘பசுவும் சாவர்க்காரும்’ என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் எழுதப்பட்டுள்ள கருத்து: “1930இல் ‘பாலா’ என்ற பிரபல மராத்திய இதழில் அதன் ஆசிரியர், ‘உண்மையான இந்து என்பவன் யார்? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு தனது பதிலையும் எழுதியிருந்தார். “பசுவை தனது தாயாகக் கருதுகிறவர் தான் உண்மையான இந்து” என்பதே அவர் தந்த விளக்கம். உடனே சாவர்க்கார் – இந்த கருத்துக்கு...

இதற்குப் பெயர் தான் இந்து இராஜ்யம்

இதற்குப் பெயர் தான் இந்து இராஜ்யம்

குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வராகக் கொண்ட பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தி லிருந்து வந்துள்ள செய்தி – பா.ஜ.க.வினர் எந்த அளவு ‘அறிவுக் கொழுந்துகளாக’ இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறது. படோப் மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலில் உள்ளூர் பா.ஜ.க. ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பாராட்டப் பட்டவர்கள் யார் என்று கேட்டால், அதிர்ச்சி வந்துவிடும். ‘பில்லி சூன்யம்’ வைக்கும் மந்திர வாதிகள்தான் பாராட்டப் பட்டவர்கள். 100க்கும் மேற்பட்ட ‘மந்திரவாதிகளை’ கவுரவித்த இந்த நிகழ்வில் மாநில அமைச் சர்களும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான புடேந்திர சிங் சுதாசமா, ஆத்மராம் பர்மர் போன்றவர்கள் பங்கேற்று பில்லி சூன்யக்காரர்களின் ‘தேச சேவையை’ மனம் உருகி பாராட் டினார்களாம். இந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங் களில் வேகமாக பரவி எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுதாசமா அளித்த பதில் தான் மிகவும் குறிப்பிடத் தக்கது. “பில்லி சூன்யம் – புனித மானவை....

உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர். பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர்...

கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்

இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார். “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: நாம் எந்த மொழிக்கும்  எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை...

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்; எழுச்சி உரைகள் உணர்ச்சிகரமான சென்னை மாநாடு

“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திருவான்மியூர் தெப்பக்குள மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடு 4.6.2017அன்று மாலை 5 மணியளவில் எழுச்சியுடன் தொடங்கியது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் – இந்த மாநாட்டை கழக தலைமைக் குழுவின் தீர்மானத்தை ஏற்று நடத்தியது. திருவான்மியூர் பகுதி முழுதும் கழகக் கொடிகள் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. பெரியார்-அம்பேத்கர் படங்களோடு அமைக்கப்பட்டிருந்த மேடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. நகரம் முழுதும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட கழக இளைஞர்கள் 15 நாள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தனர். மாநாட்டு திடலில் நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு கழகத் தோழர்கள் நடத்திய துண்டறிக்கை பரப்புரைகளும் விளம்பரங்களுமே பெரிதும் காரணம். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் புரட்சிகர பறை இசை, பாடல், நடனம், நாடகம் மாநாட்டுக்கு உணர்வூட்டின. கலை...

மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள்

மாநாட்டுக்கான சுவர் எழுத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் அய்யனார் எழுதினார். அவருக்கு உறுதுணையாக சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட பொறுப்புகளையும் வெளியூர் தோழர்களுக்கான 4 வேளை உணவு தயாரிப்பு வேலைகளையும் ஏற்று செயல்பட்டவர் ஆ.வ. வேலு. தோழர் களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர் வேழவேந்தன் செயல் பட்டார். மாவட்ட செயலாளர் இரா.உமாபதி மாநாட்டு பொறுப்புகளை முழுமையாக ஏற்று தோழர்களை வழி நடத்தினார். 15 நாள்களாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, கடை கடையாக ரூ.10, 20 என்று சிறு சிறு தொகையை ஏழை எளிய மக்களிடம் நன்கொடை பெற்று, அவர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கமளித்து, களப் பணியாற்றிய தோழர்கள் விவரம்: வில்லிவாக்கம் செந்தில், ந. விவேக், தேன்ராஜ், அருண், பிரபாகரன், ஏசுகுமார், ராஜி, சங்கீதா, இரண்யா, கலைமதி, இளையசிம்மன், இலட்சுமணன், ஜெயபிரகாஷ், பெரியார் யுவராஜ், தமிழ். அனைவரும் மாநாட்டு மேடையில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 08062017 இதழ்

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...

இந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டம்: தோழர்கள் கைது

2017 ஜூன் 4ஆம் தேதி திருவான்மியூரில் கழக மாநாடு நிறைவடைந்தது. அடுத்த நாள் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலவலகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட் டத்துக்கு தோழர்கள் தயாரானார்கள். வெளியூர்களிலிருந்து மாநாட்டுக்கு வந்த தோழர்கள் மாநாடு முடிந்து மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரும் தனி வாகனங்களில் சாஸ்திரி பவன் எதிரே அழைத்து வரப் பட்டனர். பெண்கள் உள்ளிட்ட 200 தோழர்கள் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஏராளமான தட்டிகளை கரங்களில் ஏந்தி இந்திப் பண்பாட்டுத் திணிப்பு மத்திய அரசின் பார்ப்பன ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாநில அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி மற்றும் நாமக்கல், சேலம், விழுப்புரம், திருப்பூர், கன்யாகுமரி, நாகை,...

ஈரோட்டில் மாட்டிறைச்சி உணவுடன் கழகக் கூட்டம்

ஈரோட்டில் மாட்டிறைச்சி உணவுடன் கழகக் கூட்டம்

பா.ஜ.க. மோடி பாசிச அரசின், மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை செய்த சட்டத்தைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டனக் கூட்டம் 28 .05.2017 அன்று, ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் மாலை 6 மணியளவில் நடந்தது. ரங்கம்பாளையம் கிருஷ்ணன் தலைமையேற்க, கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிவா சடையன் (திருச்செங்கோடு) செல்லப்பன் (மாவட்டத் தலைவர் ஈரோடு தெற்கு) சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) சரவணன் (நாமக்கல் மாவட்டச் செயலாளர்)  வெங்கட்,  ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற வீரா கார்த்திக் (அறிவியல் மன்றம்) நிறைவுரையாற்ற, கமலக்கண்ணன் நன்றியுரையுடன் முடிந்தது. பங்கு பெற்றோர் சித்தோடு பிரபு , பிரபாகரன், யாழ் எழிலன், சென்னிமலை இசைக்கதிர்,  இனியன், பாரதி, சத்தியராஜ், திருமுருகன், மணிமேகலை, புனிதா, பேபி, மோகன் (புலி) பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) இளங்கோ, தமிழ்செல்வன், மாதேஷ், கவிப்பிரியா, சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி...

மதுரையில் ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம், கைது!

மதுரையில் ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம், கைது!

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 அன்று ஆணவப் படுகொலைத் தடைச் சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பேரையூர் சுகன்யாவை பெற்றோரே எரித்து கொலை செய்ததை கண்டித்தும், தலைமறைவாகியுள்ள கொலைகாரன் சுகன்யாவின் தம்பியை கைது செய்ய கோரியும், ஆணவ படுகொலை தடைச் சட்டத்தை இயற்றாமல் காலங்கடத்தும் தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 காலை மதுரை,தலைமை தபால் நிலையம் முற்றுகை இடப்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட் டார்கள். இதில் ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்தி, வன வேங்கைகள் பேரவை பொதுச்செயலாளர் இரணியன், கழகத் தோழர்கள் காமாட்சி பாண்டியன், மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08062017 இதழ்

சங்கரன்கோவிலில் ‘நிமிர்வோம்’ அறிமுகக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால்வண்ணன் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் வே.இராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது . சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார் “பெரியார் இன்றும் என்றும்,” அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன்” கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . ‘நிமிர்வோம்’ இதழ்கள் குறித்து மதுரை மா.பா மணிஅமுதனும், அம்பேத்கரின் “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” நூல்குறித்து ‘தலித்முரசு’ ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி “பெரியார் இன்றும் என்றும்” நூல் பற்றியும் உரையாற்றினர் . பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார். ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு, முள்ளிக்குளம்...

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா? கழகம் கடும் கண்டனம்

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா? கழகம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. 17 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இப்போது திருமுருகன் காந்தி (மே 17) தமிழர் விடியல் கட்சியைச் சார்ந்த இளமாறன், டைசன் மற்றும் அருண் (காஞ்சி மக்கள் மன்றம்) ஆகியோர் மீது பா.ஜ.க.வின் கொத்தடிமையாக தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருக்கிறது. பிழைப்பு அரசியல் நடத்தி கோடிகோடியாக கொள்ளை அடிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு , சமூக மக்களுக்காக – இனத்துக்காகப் போராடும் செயல் பாட்டாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்து குண்டர் சட்டத்தை ஏவுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. பெரியார் முழக்கம் 01062017 இதழ்

ஜூன் 4ஆம் தேதி கழக மாநாட்டில் நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார்

ஜூன் 4ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கில் தமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்தித் திணிப்பு – நடுவண் அரசின் உரிமை பறிப்புகளைக் கண்டிக்கும் மாநாடு பிற்பகல் 4 மணி அளவில் காஞ்சி மக்கள் மன்றம் வழங்கும் பறையிசை, புரட்சிக்கர கலை நிகழ்வுகளுடன் தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி. பரந்தாமன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போசிரியர் சரசுவதி, அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை. அருண், ஆசிரியர் சிவகாமி, காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேசு, கு. அன்பு தனைசேகர், தபசி. குமரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். பெரியார் முழக்கம் 01062017 இதழ்

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்

ஜூன் 4ஆம் தேதி சென்னையில் தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடும், ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டமும் நடைபெற இருக்கிறது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாள்களாக கழகத் தோழர்கள் 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழு, கழகக் கொடி, கருப்புச் சட்டையுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் பொது மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, நன்கொடைகளை திரட்டி வரு கிறார்கள். திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை பகுதிகளில் மாலையில் தொடங்கி, இரவு வரை ஒவ்வொரு கடையாக இந்த வசூல் பணி நடந்தது. தோழர்களிடம் பொது மக்கள் பல்வேறு  கேள்விகளை எழுப்புகிறார்கள். தோழர்கள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை பொறுமையாக அளித்து வருகிறார்கள். சனி, ஞாயிறு நாள்களில் காலையிலும் வசூல் பணிகள் நடந்தன. பார்ப்பனக்...

காந்தி படுகொலையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

காந்தி படுகொலையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

காந்தி கொலையில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே 1966ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்த ஜெ.எல்.கபூர் விசாரணை ஆணையம், சதியைப் பற்றி முழுமையாக ஆராயவில்லை. எனவே காந்தி கொலை பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் ஃபாண்டிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் ஒரு ஆய்வாளர். காந்தியார் உடலில் பாய்ந்தது மூன்று குண்டுகள் மட்டுமே என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளான சாவர்க்கார்  போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். “காந்தியின் உடலில் மொத்தம் 4 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் 3 குண்டுகள் கோட்சேயின் துப்பாக்கியிலிருந்து வெடித்தவை. நான்காவது குண்டு கோட்சே துப்பாக்கியில் இருந்த குண்டின் வகையைச் சார்ந்தது...

பெங்களூரூவில் 30 தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள்

பெங்களூரூவில் 30 தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள்

27.5.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில், பெங்களூரு ஸ்ரீராம்புரத்தில் தலித் புலிகள் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 126ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் கானா பாடகர் உலகநாதனின் இசை நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தலித் சிறுத்தைகள் கட்சியின் தலித் நாகராஜ், மனித உரிமைப் போராளி முனைவர் ரூத் மனோரமா, பகுஜன் சமூக நிறுவனத்தின் தேசிய செயலாளர் கோபால் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், புரட்சியாளர் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர்ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டப்பட்டனர். பெரியார் முழக்கம் 01062017 இதழ்

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

பெரியார் பேசிய பகுத்தறிவு – மேற்கத்திய இறக்குமதி அல்ல!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) சுயமரியாதை, பகுத்தறிவு, மானம், அறிவு ஆகிய பெரியாரின் சொல்லாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வது? குறிப்பாக, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நவீன ஐரோப்பாவின் அறிவு வாதம் (ரேசனலிசம்) போன்றதா? பெரியாருடைய சுயமரியாதை, பகுத்தறிவு, மானம் அல்லது தன்மானம், அறிவு முதலான கருத்துகள் மேற்கத்திய ரேசனலிச (மேல் நாட்டு பகுத்தறிவு வாதம்) சாயல் கொண்ட கருத்துகள் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், பெரியார் மேற்கத்திய பகுத்தறிவு வாதங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து, ஓர் அறிவுத்தளத்தில் நின்று அவற்றைக் கையாண்டார் என்பது மாதிரியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் உள்ளூர் தன்மை உண்டு. அதாவது இங்குள்ள சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியல் தளங்களில் நின்று இந்தச் சொற்களை உருவாக்கினார் போலத் தெரிகின்றது. காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் என்று...

கொள்கை-கொண்டாட்டம்-சுற்றுலா என குழந்தைகளுக்கு உணர்வூட்டிய பெங்களூரு பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஐந்தாவது ஆண்டாக நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2017 இம் முறை பெங்களூருவில் நடத்தப் பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, பேராவூரணி, சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 60 குழந்தைகளும் பெங்களூருவில் 4 குழந்தைகளுமாக 64 பேர் கலந்துகொண்டனர்.  14 பேர் நெறி யாளர்களாக இருந்து முகாமை நெறிப்படுத்தினர். 12.5.2017 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குழந்தைகள் நெறியாளர்கள் அனைவரும் பெங்களூரு புறப்பட்டனர். குழந்தைகளை தொடர் வண்டி நிலையத்திலிருந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சொகுசுப் பேருந்துடன் பெங்களூருவில் தோழர்கள் காத்திருந்தனர். இரவு 10.00 மணியளவில் முகாம் நடக்கும் ஐஎஸ்ஐ பயிற்சி மையத்தை அடைந்தனர். 13.5.2017 முதல் நாள் முதல் நாள் தொடக்க விழாவுடன் முகாம் தொடங்கியது. முகாமைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியோர் ‘கற்பி, ஒன்று சேர்’ (Educate and...

உக்கம்பருத்திக்காட்டில் கழகத்தின் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம்

சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளை கழக சார்பில் 24, 25.05.2017 ஆகிய இரண்டு நாள்கள் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதல்நாள் முதல் வகுப்பு “மதவாத அரசியல்” (முஸ்லிம், மாட்டுகறி, சமஸ்கிருதம்) எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி வகுப்பு எடுத்தார். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு “பெரியாருக்கு முன்னும் பின்னும்; நீதிகட்சி சாதனைகள்” குறித்து புலவர் செந்தலை கவுதமன் வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு “தி.வி.க. உங்களிடம் எதிர்பார்ப்பது” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “இடஒதுக்கீடு – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் பால்.பிரபாகரன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். இரவு 8.30 மணிக்கு முதல் நாள் வகுப்பு முடிவுற்றது. இரவு உணவுக்கு பின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 25.5.17 அன்று காலை “உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம்” குறித்து மருத்துவர் எழிலன் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து “ஜாதி தோற்றம், இருப்பு, ஒழிப்பு” எனும்...

இராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச் சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசுமாடு மட்டுமல்ல; காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக் கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம். இப்படிக் கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது...

தி.வி.க.  – தி.க. – த.பெ.தி.க. தோழர்கள் பங்கேற்பு: மயிலையில் கழகம் நடத்திய ‘நீட்’ எதிர்ப்பு பொதுக் கூட்டம்

தி.வி.க. – தி.க. – த.பெ.தி.க. தோழர்கள் பங்கேற்பு: மயிலையில் கழகம் நடத்திய ‘நீட்’ எதிர்ப்பு பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட சார்பில்  17.05.2017 மாலை 6:30 மணியளவில்  “நீட் தேர்வு விளக்க கூட்டம்” மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்றது. கழகத்தின் மயிலாப்பூர் பகுதி  தோழர் மாரிமுத்து  தலைமையில் பிரவீன், சஞ்சய், விஜயகாந்த், சரண், சிவா ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடினார். அதையடுத்து, மருத்துவர் எழிலன், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளான மே 17 அன்று பாலச்சந்திரன் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பேசிய, மருத்துவர் எழிலன் மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் அரசு சுகாதார நிலையங்களை மூட நினைக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத்தின் சார்பாக முகிலன் பங்கேற்று மத்திய அரசிற்கு அடிபணிந்து கிடக்கும் மாநில அரசை கண்டித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் வழக்கறிஞர் துரை அருண் சட்டத் துறையில் திணிக்க முற்பட்ட அதே தேர்வு முறைகளை இப்போது மத்திய அரசு மருத்துவ...

திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை காந்தியின் கபட வாதங்கள்: தோலுரித்தவர் அம்பேத்கர்

காந்தியின் கபட வாதங்களை அம்பேத்கர் எப்படி எதிர் கொண்டார் என்பதை விளக்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி: இட ஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அம்பேத்கர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார். அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது...

ஜூன் 4 சென்னை மாநாட்டு செயல் திட்டங்களை வகுக்க மாவட்டக் கழகம் கலந்துரையாடல்

ஜூன் 4 சென்னை மாநாட்டு செயல் திட்டங்களை வகுக்க மாவட்டக் கழகம் கலந்துரையாடல்

“தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாட்டிற்கான சென்னை நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்  20.05.2017 மாலை 5 மணிக்கு  இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள், தோழர்களின் மாநாட்டிற்கான பணிகள் என பல்வேறு செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டன.  தபசி குமரன், அன்பு தனசேகரன், வேழவேந்தன், அய்யனார், இரா.செந்தில்குமார் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை கூறினர். பெரியார் முழக்கம் 25052017 இதழ்

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

பெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்பதாலா? அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப் பாடுகளை நிறைவு செய்ய முடியுமா? பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜேஎன்யூ மாணவர்களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத் திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத்துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரிகளாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசுகின்றார்கள். ஆனால்...

ஜூன் 4 – தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு ஜூன் 5 – மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்புப் போராட்டம் சென்னையில் இரு பெரும் நிகழ்ச்சிகள்

நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஜூன் 5ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகப் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த இருக்கிறது. போராட்டத்துக்கு முதல் நாள் ஜூன் 4ஆம் தேதி சென்னையில் “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” எனும் முழக்கத்தை முன் வைத்து திறந்த வெளி மாநாடு நடக்கிறது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மாநாட்டுப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திருவான்மியூர் – தெப்பக்குளம் மைதானத்தில் இந்தி எதிர்ப்பு போராளிகள் “தாளமுத்து-நடராசன் நினைவு அரங்கில்” மாநாடு நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், பறை இசையுடன் தொடங்கும் மாநாட்டில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கழகத் தலைவர், பொதுச் செயலாளரும் பங்கேற்கிறார்கள். தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு என்று மாநாட்டுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுதும் மாநாடு –...

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்துவரும் உரிமைகளை மீட்போம்!

இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழி நடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம். ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை  ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு,  ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும், பதவிக்கு வரவும் ‘கீழ்ஜாதி’களுக்கு உரிமை இல்லை என திமிராட்டம் போட்டது. அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து, அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக, இட ஒதுக்கீடு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த சமூகநீதிதான் நமக்கான...

சித்தோட்டில் மாட்டுக் கறி விருந்து

சித்தோட்டில் மாட்டுக் கறி விருந்து

திராவிடர் விடுதலைக் கழகம் , சித்தோடு கிளைக் கழகத்தின் சார்பில் சித்தோடு வாய்க்கால் மேட்டில் 14.05.2017 மாலை 6:30 மணியளவில் பிரபு தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்னும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த வீரா கார்த்தி சமகால மாட்டுக்கறி அரசியல் பற்றியும் நீட் தேர்வைப் பற்றியும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கைகள் பற்றி சிறப்புரையாற்றினார். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.  இக்கூட்டத்தில் இரசிபுரம் பிடல் சேகுவேரா, பள்ளிபாளையம் தோழர்கள் முத்துப்பாண்டி, தங்கதுரை, சரவணன், பாபு சென்னிமலை செல்வராஜ், சிவானந்தம், சித்தோடு தோழர்கள் கமலக்கண்ணன், பிரபாகரன், சத்யராஜ், சௌந்தர், கதிரேசன், சுர்ஜித் சேகர், ஜெய பாரதி, எழிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்....

தோழர் பாரூக் குடும்ப நிதி நன்கொடையாளர் பட்டியல்

தோழர் பாரூக் குடும்ப நிதி நன்கொடையாளர் பட்டியல்

ஈரோடு சிவக்குமார் –              ரூ.        10,000 சேலம் சீனு –              ரூ.        10,000 அலக்சு விட்டல் –              ரூ.        500 அருள் –              ரூ.        500 உலகநாதன் –              ரூ.        500 பெங்களூர் சித்தார்த் –              ரூ.        1,000 ரவி –              ரூ.        1,000 தாந்தோனி –              ரூ.        1,000 செல்வ பாண்டியன் –              ரூ.        1,000 ஜீவா –              ரூ.        2,500 அருண் சதீசு (சென்னை) –              ரூ.        1,000 ந. தங்கவேல் –              ரூ.        500 பிரபு –              ரூ.        500 விருதுநகர் கணேசமூர்த்தி –              ரூ.        1,000 டாக்டர் சக்திவேல் (ஈரோடு) –              ரூ.        5,000 தமிழரசன் அப்துல் காதர் –              ரூ.        5,000 வினோத் கந்தன் –              ரூ.        3,000 பேராசிரியர் சரசுவதி...

கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...

வெளி வந்துவிட்டது!  ‘நிமிர்வோம்’  மே இதழ்

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ மே இதழ்

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஜாதியக் கலாச்சாரம் – எம்.எஸ்.பாண்டியன் ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியான இந்தி – அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள் சுய நிர்ணய உரிமை கோருவது குற்றமா? இராமானுஜர் ஆயிரமாண்டு விழா : சில கேள்விகள் பசு பாதுகாவலர்களே பதில் சொல்லுங்கள்! – தலையங்கம் இந்தி: அம்பேத்கரின் எச்சரிக்கை ‘ஹோம’ குண்டப் புகை உடலுக்கு நல்லதா? – நக்கீரன் கடவுள் மறுப்பு: சங்க இலக்கியங்களி லிருந்து சுயமரியாதை இயக்கம் வரை – முனைவர் க. நெடுஞ்செழியன் ஜாதி அடையாளம் பெருமைக் குரியதா? – பெரியார் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com  

எழுச்சியுடன் சைக்கிள் பேரணி – கபடி போட்டி – பொதுக் கூட்டம் : மேட்டூர் (ஆர்.எஸ்) பகுதியில் அம்பேத்கர் விழா

எழுச்சியுடன் சைக்கிள் பேரணி – கபடி போட்டி – பொதுக் கூட்டம் : மேட்டூர் (ஆர்.எஸ்) பகுதியில் அம்பேத்கர் விழா

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏப்.14 அன்று பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடந்தது. கபடி போட்டி, சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் என்று நிகழ்ச்சிகள் எழுச்சி நடைபோட்டன. காலை 10 மணிக்கு மேட்டூர் அணை குட்டி (எ) பத்மநாபன் நினைவுத்திடலில் எஸ். முருகேசன், ஜம்பு நதி (மேட்டூர் ஹைடெக் திளை ஆஷ் பிரிக்ஸ்) ஆகியோர் கபடி போட்டியை தொடங்கி வைத்தனர். இறுதிப் போட்டியை பிற்பகல் என். சந்திரசேகரன் (நகர செயலாளர், அ.இ.அ.தி.மு.க.) தொடங்கி வைத்தார். முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை தேசிய சமூக விருது பெற்ற ஆ.டி.சலாம் (எ) தணிகாசலம் வழங்கினார். டி.கே.ஆர். நினைவு சுழற் கோப்பையை கே.இரமேஷ் (கே. அசோசியேட்ஸ்) வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரத்தை பி. ஸ்டாலின் (மேட்டூர் அசோசியேட்ஸ்), மே.த. சரவணன் (பேத அசோசியேட்ஸ்) ஆகியோர் வழங்கினர். புலவர் இமயவரம்பன் நினைவு...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை அம்பேத்கர் – ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரை: புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க...

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

பெரியாரின் சிந்தனைகளுக்கு – தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு!

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. சமகால சமூக அரசியல் சூழலில் பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் பிரச்சினைகளை அணுகுவதிலும், மக்கள்  திரளைக்   கட்டமைப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை சுயவிமர்சனங் களோடு முன் வைக்கிறது இந்தப் பேட்டி. இந்திய தத்துவ மரபில் இலக்கியங்களில் புதைந்துள்ள முற்போக்கு கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். அந்தப் பார்வையில் விவாதங்களுக்கும் விமர்சனங் களுக்குமான அவசியத்தை வலியுறுத்து கிறார். திராவிடர் விடுதலைக் கழகம் சேலத்தில் நடத்திய வேத மரபு மறுப்பு மாநாடு, இந்த திசை வழியில் மேற்கொண்ட முன்முயற்சியாகும். உரத்த சிந்தனைகளுக்கு வழி திறந்து விடும் இந்த பேட்டியை அதன் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியத் தத்துவங்களுக்கு ஒரு சமகாலத் தன்மை உள்ளதா? அதாவது நமது சமகாலப் போராட்டங்...

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

திருப்பூரில் மே தின விழா, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி,பொதுக்கூட்டம் 01052017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01052017 அன்று காலை முதல் இரவு வரை முழு நாள் நிகழ்வாக காலை தொடங்கி மாலை வரை விளையாட்டுப் போட்டிகள், மாலை பறை இசை, கலைநிகழ்ச்சி, இரவு  பரிசளிப்பு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் இராயபுரம் மேற்கு திருவள்ளுவர் திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காலை 10 மணிக்கு கழக கொடியினை கழக பொருளாளர் தோழர் சு.துரைசாமி அவர்கள் கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி மே தின விழாவை துவங்கி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளை மாநகர செயலாளர் தோழர் மாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் அப்பகுதி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மேடை நிகழ்வாக தோழர் காவை . இளவரசன் அவர்களின் மந்திரமா,தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. மே...

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு செ.கு. தமிழரசன் பதில்

டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு செ.கு. தமிழரசன் பதில்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “பட்டியல் இனப் பிரிவு” ஒன்றே தேவை இல்லை; அதை நீக்கிவிட வேண்டும் என்றும், இதுவரை பட்டியல் இனப் பிரிவால் இந்தப் பிரிவில் அடங்கியுள்ள மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்க வில்லை என்றும், ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை’ பட்டியலினப் பிரிவி லிருந்து நீக்கி அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதோடு ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனி வரலாறு கலாச்சாரம் உண்டு” என்று கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனப் பிரிவில் யார் சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை’ என்று கூறியுள்ள அவர், “இந்தியாவில் ஒரே பட்டியலின் கீழ் அனைத்துப் பிரிவு மக்களையும் இணைத்ததே அம்பேத்கர் செய்த தவறு” என்றும் கூறியிருக்கிறார். தனித் தொகுதி முறையை காந்தியாருக்காக அம்பேத்கர் விட்டுக் கொடுத்ததை ஏற்க முடியாது என்றும்,  தேர்தலில் தனித்...

சென்னையில் குழந்தைகள் பழகு முகாம்

கழக செயல்வீரர் செ.பத்ரிநாராயணன், 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஏப்.30 ஆம் தேதி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமுக்கு ஏற்பாடு செய் திருந்தது. இராயப் பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில் 40 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் வீ. சிவகாமி சமூக கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ஜெ. சியாம்சுந்தர், மோனிக்கா ஆகியோர் குழந்தைகளுக்கு கூடிப் பழகுதல், விளையாட்டு, ஓவியம், அறிவியல் குறித்த பயிற்சிகளை வழங்கினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரை, அருண், ஜெ. சியாம் சுந்தர் ஆகியோர் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். காலை 11 மணியளவில் தொடங்கிய பயிற்சி, மாலை 6 மணி வரை நீடித்தது. பெரியார் முழக்கம் 11052017 இதழ்

பெண்களே சடலத்தை சுமந்தனர்: கழகத் தோழர் செந்தில் தந்தை இராமலிங்கம் முடிவெய்தினார்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்வீரர் செந்தில் (எப்.டி.எல்.) அவர்களின்  தந்தை இரா. இராமலிங்கம் (73) கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 5ஆம் தேதி காலை முடிவெய்தினார். முடிவெய்திய இரா. இராமலிங்கம், தீவிரமான தி.மு.க. தொண்டர். அவரது விருப்பப்படி தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூடச் சடங்குகளுமின்றி இறுதி நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மின்சார இடுகாடு வரை, பெண்களே உடலை சுமந்து வந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தியதோடு இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர். பெரியார் முழக்கம் 11052017 இதழ்

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

குஜராத்தின் சாதி ஒழிப்பு இளம் போராளி மேவானி பேட்டி

 “பெரியார் போன்ற தீரர்களைப் பெற்றதற்கு பெருமைப்படவேண்டும்!” பெரியாரின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை சமூக நீதித் தளத்தில் ஒரு படி மேலேதான் நிறுத்தியுள்ளது. சாதி என்பது உழைப்புச் சக்தியை மட்டுமல்ல, உழைப்பாளர்களையும் பிளவுபடுத்துகிறது. ஜிக்னேஷ் மேவானி குஜராத் மக்களின் மனங்களில் ஆழ, அகல பதிந்துவிட்ட ஒரு பெயர். செத்த மாட்டை சுத்தம் செய்ய மாட்டோம், ‘மாட்டின் வாலை நீங்கள் வைத்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள்’ என்று குஜராத்தின் உனாவில் லட்சக்கணக்கான தலித் மக்களை ஒன்று திரட்டிய எழுச்சியின் நாயகன். சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் சொற்பொழிவில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் அளித்த பேட்டி: குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தி யிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில்...