ஜூன் 4ஆம் தேதி கழக மாநாட்டில் நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார்

ஜூன் 4ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கில் தமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்தித் திணிப்பு – நடுவண் அரசின் உரிமை பறிப்புகளைக் கண்டிக்கும் மாநாடு பிற்பகல் 4 மணி அளவில் காஞ்சி மக்கள் மன்றம் வழங்கும் பறையிசை, புரட்சிக்கர கலை நிகழ்வுகளுடன் தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி. பரந்தாமன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போசிரியர் சரசுவதி, அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை. அருண், ஆசிரியர் சிவகாமி, காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேசு, கு. அன்பு தனைசேகர், தபசி. குமரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

பெரியார் முழக்கம் 01062017 இதழ்

You may also like...