சித்தோட்டில் மாட்டுக் கறி விருந்து
திராவிடர் விடுதலைக் கழகம் , சித்தோடு கிளைக் கழகத்தின் சார்பில் சித்தோடு வாய்க்கால் மேட்டில் 14.05.2017 மாலை 6:30 மணியளவில் பிரபு தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்னும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த வீரா கார்த்தி சமகால மாட்டுக்கறி அரசியல் பற்றியும் நீட் தேர்வைப் பற்றியும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கைகள் பற்றி சிறப்புரையாற்றினார். இறுதியாக கிருஷ்ண மூர்த்தி நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. இக்கூட்டத்தில் இரசிபுரம் பிடல் சேகுவேரா, பள்ளிபாளையம் தோழர்கள் முத்துப்பாண்டி, தங்கதுரை, சரவணன், பாபு சென்னிமலை செல்வராஜ், சிவானந்தம், சித்தோடு தோழர்கள் கமலக்கண்ணன், பிரபாகரன், சத்யராஜ், சௌந்தர், கதிரேசன், சுர்ஜித் சேகர், ஜெய பாரதி, எழிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இறுதியில் தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 25052017 இதழ்