சென்னையில் குழந்தைகள் பழகு முகாம்

கழக செயல்வீரர் செ.பத்ரிநாராயணன், 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஏப்.30 ஆம் தேதி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமுக்கு ஏற்பாடு செய் திருந்தது. இராயப் பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில் 40 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் வீ. சிவகாமி சமூக கல்வி நிறுவனத்தைச் சார்ந்த ஜெ. சியாம்சுந்தர், மோனிக்கா ஆகியோர் குழந்தைகளுக்கு கூடிப் பழகுதல், விளையாட்டு, ஓவியம், அறிவியல் குறித்த பயிற்சிகளை வழங்கினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரை, அருண், ஜெ. சியாம் சுந்தர் ஆகியோர் பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். காலை 11 மணியளவில் தொடங்கிய பயிற்சி, மாலை 6 மணி வரை நீடித்தது.

பெரியார் முழக்கம் 11052017 இதழ்

You may also like...