மதுரையில் ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம், கைது!

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 அன்று ஆணவப் படுகொலைத் தடைச் சட்டம் இயற்றகோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பேரையூர் சுகன்யாவை பெற்றோரே எரித்து கொலை செய்ததை கண்டித்தும், தலைமறைவாகியுள்ள கொலைகாரன் சுகன்யாவின் தம்பியை கைது செய்ய கோரியும், ஆணவ படுகொலை தடைச் சட்டத்தை இயற்றாமல் காலங்கடத்தும் தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.05.2017 காலை மதுரை,தலைமை தபால் நிலையம் முற்றுகை இடப்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட் டார்கள். இதில் ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கபீர் நகர் கார்த்தி, வன வேங்கைகள் பேரவை பொதுச்செயலாளர் இரணியன், கழகத் தோழர்கள் காமாட்சி பாண்டியன், மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 08062017 இதழ்

You may also like...