திருப்பூரில் மே தின விழா, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி,பொதுக்கூட்டம் 01052017
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01052017 அன்று காலை முதல் இரவு வரை முழு நாள் நிகழ்வாக காலை தொடங்கி மாலை வரை விளையாட்டுப் போட்டிகள், மாலை பறை இசை, கலைநிகழ்ச்சி, இரவு பரிசளிப்பு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் இராயபுரம் மேற்கு திருவள்ளுவர் திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கழகத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
காலை 10 மணிக்கு கழக கொடியினை கழக பொருளாளர் தோழர் சு.துரைசாமி அவர்கள் கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி மே தின விழாவை துவங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளை மாநகர செயலாளர் தோழர் மாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் அப்பகுதி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு மேடை நிகழ்வாக தோழர் காவை . இளவரசன் அவர்களின் மந்திரமா,தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது.
மே தின கருத்துத்துரையை தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி வழங்கினார். தொடர்ந்து கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வுக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் இராசு,மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்கு மாவட்ட அமைப்பாளர் இராமசாமி, மாநகர தலைவர் தனபால் மாநகர அமைப்பாளர் முத்து, நீதிராசன், அகிலன், கருணாநிதி, ஜெகதீசன்,பல்லம் ஒன்றிய செயலாளர் சண்முகம்,பாண்டிசேரி தீனதயாளன், கோபி மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, மேட்டூர், இராசிபுரம் சுமதி, பிடல் சேகுேவேரா தோழர்கள் முத்துலட்சுமி பார்வதி,கோமதி,வசந்தி மணி, நாகராஜ் சாரதி, சாலினி, சத்தி, ந.சரவணன், இராமகிருட்டிணன் சாமிநாதன் சண்முகசுந்தரம்,சரவணன்,வளர்
ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்