ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’; தோளில் பிறந்தவர்கள் ‘சத்திரியர்’; தொடையில் பிறந்தவர்கள் ‘வைசியர்’; காலில் பிறந்தவர்கள் ‘சூத்திரர்’ இவர்கள் அடிமையான வர்கள் என்று சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட்டு வருகிறது பார்ப்பனியம்.

“சூரிய சந்திரன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருவது ஆரிய இனம்; இதற்கு தோற்றமே இல்லை. நாம் எல்லோரிலும் உயர்ந் தவர்கள்” என்று கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர்.

ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின்  வேத கலாச்சாரமே ‘பாரத’த்தின் கலாச் சாரம். ‘அவாளி’ன் சமஸ்கிருதப் பண்பாடே புனித மானது” என்று இப்போதும் பார்ப்பனியம் வரலாற்றைக் கட்டமைக்கிறது.

அனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கும் ஆய்வு சர்வதேச விஞ்ஞானிகளால் இப்போது கண்டறியப்பட் டுள்ளது. பிரிட்டன் ஹர்ட்டர்ஸ் ஃபீல்டு பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு 3 மாதங்களுக்கு முன்பு விஞ்ஞான ஆய்வு இதழில் (bmc Evolutionary biology) வெளியிடப்பட்டு உலகம் முழுதும் பரபரப்பை உருவாக்கி யுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதிப் பகுதியில் சமஸ்கிருத மொழியுடன் ஆரியர் வந்தனர்; தங்கள் பண்பாட்டை திணித்தனர். இந்த வரலாற்றை மரபணு சோதனை வழியாக உறுதிப் படுத்துகிறது இந்த ஆய்வு. அனைத்து இனங்களும் இடப் பெயர்வுகளுக்கும் கலப்புக்கும் உள்ளானவர்களே என்று ஆய்வு கூறுகிறது.

இது குறித்து விரிவான கட்டுரையை ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஜூன் 7, 2017) வெளி யிட்டிருக்கிறது. மரபணு அடிப் படையில் நவீன அறிவியலுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்து விரிவான தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும்.

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை ஒரு கட்டத்தில் ஆரியர்கள் உருவாக்கினார்கள். பிறப்பினால் உயர்ந்தவர் என்று எவரும் கிடையாது. அனைவரும் குடி பெயர்ந்தவர்கள்தான்.

வானமும் பூமியும் தான் நம் அனைவருக்கும் வீடு என்பதை திட்டவட்டமாக உறுதிப்படுத்தி விட்டது இந்த ஆய்வு என்று ‘இந்து’வில் கடிதம் எழுதி யிருக்கிறார் ஒரு வாசகர்.

பெரியார் முழக்கம் 22062017 இதழ்

You may also like...