சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா? கழகம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. 17 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இப்போது திருமுருகன் காந்தி (மே 17) தமிழர் விடியல் கட்சியைச் சார்ந்த இளமாறன், டைசன் மற்றும் அருண் (காஞ்சி மக்கள் மன்றம்) ஆகியோர் மீது பா.ஜ.க.வின் கொத்தடிமையாக தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருக்கிறது.

பிழைப்பு அரசியல் நடத்தி கோடிகோடியாக கொள்ளை அடிக்கும் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு , சமூக மக்களுக்காக – இனத்துக்காகப் போராடும் செயல் பாட்டாளர்களை சமூக விரோதிகளாக சித்தரித்து குண்டர் சட்டத்தை ஏவுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

பெரியார் முழக்கம் 01062017 இதழ்

You may also like...