மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள்
மாநாட்டுக்கான சுவர் எழுத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் அய்யனார் எழுதினார். அவருக்கு உறுதுணையாக சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட பொறுப்புகளையும் வெளியூர் தோழர்களுக்கான 4 வேளை உணவு தயாரிப்பு வேலைகளையும் ஏற்று செயல்பட்டவர் ஆ.வ. வேலு. தோழர் களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர் வேழவேந்தன் செயல் பட்டார். மாவட்ட செயலாளர்
இரா.உமாபதி மாநாட்டு பொறுப்புகளை முழுமையாக ஏற்று தோழர்களை வழி நடத்தினார்.
15 நாள்களாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, கடை கடையாக ரூ.10, 20 என்று சிறு சிறு தொகையை ஏழை எளிய மக்களிடம் நன்கொடை பெற்று, அவர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கமளித்து, களப் பணியாற்றிய தோழர்கள் விவரம்:
வில்லிவாக்கம் செந்தில், ந. விவேக், தேன்ராஜ், அருண், பிரபாகரன், ஏசுகுமார், ராஜி, சங்கீதா, இரண்யா, கலைமதி, இளையசிம்மன், இலட்சுமணன், ஜெயபிரகாஷ், பெரியார் யுவராஜ், தமிழ். அனைவரும் மாநாட்டு மேடையில் பாராட்டப் பெற்றனர்.
பெரியார் முழக்கம் 08062017 இதழ்