கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம்,

க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்), பாஸ்கர்( ரி.ஒ.அ), வே.ராஜேஷ் (ச.ஒ.அ.).

img_6495 img_6497 img_6507 img_6511 img_6516 img_6519 img_6523 img_6535

You may also like...