பெங்களூரூவில் 30 தலித் அமைப்புகள் இணைந்து நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள்
27.5.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில், பெங்களூரு ஸ்ரீராம்புரத்தில் தலித் புலிகள் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 126ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் கானா பாடகர் உலகநாதனின் இசை நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தலித் சிறுத்தைகள் கட்சியின் தலித் நாகராஜ், மனித உரிமைப் போராளி முனைவர் ரூத் மனோரமா, பகுஜன் சமூக நிறுவனத்தின் தேசிய செயலாளர் கோபால் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், புரட்சியாளர் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர்ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 01062017 இதழ்